பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி அழுந்துார் நின்ற அஞ்சனக் குன்றம் 63 உண்ணும் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம் கண்ணன்." என்கின்றார். கண்ணன் ஒருவனே ஆழ்வாருக்குத் தாரக போஷக போக்கியங்கள். இதனால் நம்மாழ்வாரைக் கிருஷ்ண திருஷ்ண தத்துவமாக (திருஷ்ணம் - விடாய்) உருவகித்துப் பேசுவர் பராசரப்பட்டர் என்ற வைணவப் பெரியார். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் காளியாக்குடி அய்யர் விடுதியிலிருந்து திருவழுந்துர் என்ற திவ்விய தேசத்திற்குப் பயணமாகின்றோம். இவ்வூர் விழுப்புரம் - கடலூர் - திருச்சி இருப்பூர்திப் பாதையில் உள்ளது. இருப்பூர்தி நிலையம் உண்டு. மெயில், எக்ஸ்பிரஸ் வண்டிகள் இங்கு நிற்கா. இந்த வண்டிகளில் வருபவர்கள் மயிலாடுதுறையில் இறங்கி ஏதாவது ஒரு விடுதியில் தங்கி வசதிகளுடன் திருவழுந்துர் வரலாம். திருவழுந்துர் நிலையத்தில் இறங்குபவர்கள் தெம்பிருந்தால் நடராஜா சர்விஸை எளிதாக மேற்கொள்ளலாம். தெம்பில்லாதவர்கள் கொம்பு இல்லாத மொட்டை மாடுகள் கட்டிய வண்டிகளில் ஏறி வரலாம். மயிலாடுதுறையில் இறங்கி வசதிகளுடன் இவ்வூருக்கு வருதலே சிறப்பு. மயிலாடு துறையிலிருந்து திருவழுந்துருக்கு நகரப் பேருந்து வசதி உண்டு. பேருந்தில் வரும்போதே நம் மனம் இவ்வூர்ப் பெயரைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகின்றது. உபரி சரவசு என்ற ஓர் அரசன். இவனிடம் இருந்த ஒரு தேர் வானவீதியில் உருண்டோடும் தன்மையது. இவன் தேவர்கட்கும் இருடிகட்கும் இடையில் எழுந்த வழக்கில் ஒருதலைச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதில் முனிவர்கள் அவர் தேர் பூமியில் அழுந்தட்டும் என்று சாபமிட்டனர். அவர்கள் சாபம் இவ்வாறு பலித்தது. ஒரு சமயம் அவன் வான வீதியில் சென்றபொழுது இவ்வூர்த் திருமால் திருக்கோயிலுக்கு நேராக இவன் தேர் செல்ல நேர்ந்தது. இதனைச் சிறிதும் பொறுக்க முடியாத பெரிய திருவடி (கருடன்) தம் மந்திர ஆற்றலால் தேரைக் கீழே இழுத்து பூமியில் அழுந்த வைத்து விடுகின்றார். பின்னர் உபரிசரவசு எம்பெருமானை வணங்கி மன்னிப்புப் பெற்றுத் தேரோடு திரும்பியதாகப் புராண வரலாறு. தேர் (பூமியில்) அழுந்திய ஊராதல் பற்றி திருஅழுந்துர் என்ற திருநாமம் பெற்றது இவ்வூர் என்று அறிகின்றோம். 5. திருவாய். 6.7:1 6. தாரகம் - தரிக்கச் செய்வது. நீர் முதலாயின. போஷகம் - புஷ்டியை (பலத்தைத் தருவது. சோறு முதலாயின. போக்கியம் - இன்பத்தைத் தருவது. தின்னும் வெற்றிலை முதலாயின.