பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி அழுந்துார் நின்ற அஞ்சனக் குன்றம் 67 இவ்வூர் மறையவர்கள் எப்போதும் இவ்வூர் எம்பெருமானைச் சூழ்ந்துகொண்டு துதியாநிற்பர் (7-6.5-6). இவர் மறையோதுவதால் எழும் ஒலி எப்போதும் கடலொலிபோல் ஒலித்துக் கொண்டே இருக்கும் (7.5-8). இவ்வூர் அந்தணர்களின் தன்மையை, எங்கும்மலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அங்கமலத்து அயன் அனையார்’ (வேள்வி - யாகம்; கேள்வி - நூற்கேள்வி, கமலம் - தாமரை, அயன் - நான்முகன்) என்று எடுத்துக்காட்டுவர் ஆழ்வார். “செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர், திசைமுகனை அனையவர்கள், செம்மைமிக்க அந்தணர்கள்” (7-8-7) என்று இவர்களைச் சிறப்பித்துப் பேசுவர். மண்டபம் முதலிய எல்லா இடங்களிலும் வேதம் ஓதிய அந்தணர்கள் நிறைந்து காணப்பெறுவர்(7.8.6). இத்தகைய சிறந்த சூழ்நிலையில் அமைந்த சிறப்புமிக்க திருவழுந்துரில் மேற்குப்பகுதியில் திகழ்வது பெருமாள் கோயில். இந்த இருப்பிடத்தை வலியுறுத்துவதுபோல், ஒருமுறைக்கு ஒன்பது முறையாக, அழுந்துர் மேல்திசை நின்ற அம்மானே" என்று ஒரு திருமொழியில் பன்னியுரைக்கின்றார் ஆழ்வார். இத்திருக்கோயிலுக்கு முன்னர் ஒரு பெரிய திருக்குளம் உள்ளது. இது தர்சன புஷ்கரிணி என்ற திருநாமத்தால் வழங்கி வருகின்றது. இந்தப் புஷ்கரிணியைச் சுற்றிக்கொண்டு வந்தால் முதலில் தென்படுவது ஊஞ்சல் மண்டபம். திருக்கோயிலில் நுழைந்தவுடன் இராசகோபுரத்தின் உள்பக்கத் தென்புறத்திலுள்ள மாடங்களில் இருப்பவை கம்பன் மற்றும் அவன் துணைவியார் சிலைகள், ஒன்றிலிருப்பவை பின்னப்பட்டவை, மற்றொன்றில் இருப்பவை புதிய சிலைகள். இராம காதை பாடியருளிய கம்பனுக்கு இத்திருக்கோயிலில் முதல் இடம் கிடைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாக உள்ளது. இனி, திருக்கோயிலினுள் நுழையச் சித்தமாகின்றோம். இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஆமருவியப்பன், பசுவை விரும்பிய அப்பன். இதனை நினைந்தே ஆழ்வாரும், அன்றாவின் நறுநெய் அமர்ந்துண்ட அணிஅழுந்துளர் நின்றானை' 9. பெரி. திரு. 7.8:4 10. பெரி. திரு. 7:3 11. பெரி. திரு. 7.6:4