பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி என்று மங்களாசாசனம் செய்கின்றார். பசு நெய்யை விரும்பி அமுது செய்வதற்காகவே திருவழுந்துரில் எழுந்தருளியுள்ளான் ஆமருவியப்பன். திருவாய்ப்பாடியின் நிலையிலே திருவழுந்துரைத் திருவுள்ளம் பற்றினான் என்பது ஆழ்வார் பெற வைக்கும் குறிப்பு. அன்றியும், இத்திருப்பதியை மங்களாசாசனம் செய்யத் தொடங்கும் முதல் திருமொழி முதற் பாசுரத்திலேயே, தந்தைகாலில் பெருவிலங்கு தாள்.அவிழ நல்லிருட்கண் வந்தஎந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்" (தந்தை - வசுவேதர், தாள் அவிழ - பூட்ட இற்று விழும்படியாக நல் இருள் - நடு நிசி, வந்த - திருவவதரித்த மருவி நின்ற - நித்திய வாசம் செய்த.) என்று கண்ணனை இனங்காட்டி விடுகின்றார் ஆழ்வார். இவ்விடத்தில் ஓர் இதிகாசம்: கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் பிருந்தாவன எல்லையில் தன் தோழன்மார்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கின்றான். இந்த நேரத்தில் அவ்வழி ஏகின நான்முகன் ஆநிரைகளைத் திருவழுந்துருக்கு ஒட்டி வந்து விடுகின்றான். இதை அறிந்த கண்ணன் புதிதாக ஓர் ஆநிரையையே உண்டாக்கி ஆயர்களிடம் தந்து விடுகின்றான். நான்முகனும் தன் பிழையை உணர்கின்றான். அவனது வேண்டுகோளின்படியே திருவழுந்துர் சென்ற பசுநிரையைக் காக்கும் கோவலனாக ஆமருவி அப்பனாக - அழுந்துர் நின்றுகந்த அமரர் கோவாக அழுந்தையில் - மன்னி நின்ற தேவாதி தேவனாக எழுந்தருளி விடுகின்றான்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான். இவன் அருகில் இடப் பக்கத்தில் பெரிய திருவடியும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றான். கருடனைத் தவிர, காவிரி அன்னை, மார்க்கண்டன், பிரகலாதன் இவர்களும் கருவறையில் உள்ளனர். கருவறையிலுள்ள உற்சவரின் பின்புறம் பசு ஒன்று நின்று கொண்டிருப்பதைக் காணலாம். ஆமருவியப்பனல்லவா? உற்சவர் மிக அழகானவர். ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை திருமுழுக்கு அபிஷேகம் பெறுகின்றார். ஒரு திருமுழுக்கிற்குக் காவிரிக்கே எழுந்தருளு கின்றார். அன்றுதான் அர்ச்சகர்கள் உற்சவரின் முழுமேனி அழகை யும் நாம் காணுமாறு செய்வார்கள். பங்குனிப் புனர்வசு இராமன் பிறந்தநாள். அன்று கண்ணனையே இராமனாக அலங்கரித்து ஊருக்குக் கிழக்கேயுள்ள வேதபுரி ஈசுவரர் கோயில் வரை திருவுலா வரப் பண்ணுவர். இராம காதை பாடிய கம்பனுக்கு ஆமருவியப்பன் இராமனாகவே சேவை சாதிக்கின்றான் என்றும் கூறுவர். 12. பெரி. திரு. 7.5:1