பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii வழங்கப்பெற்ற சம்பந்தர் திருமங்கையாழ்வாரின் ஒரு குறளாய் இருநில மூவடிமண் வேண்டி என்ற ஒரு திருமொழியைக் கேட்டவுடன், வியந்து தமது வேலாயுதத்தை இவரது திருமுன் காணிக்கையாகச் சமர்ப்பித்தாா என்ற நிகழ்ச்சியைப் பேராசிரியரின் இந்த நூல் மூலம் அறிந்து வியப்புற்றேன். இறைவனுடைய அபய முத்திரை குற்றம் புரிந்தவாகளையும் திருத்தும் தன்மைத்து என்று பொருள்பட ரெட்டியார் அவர்கள் அபய முத்திரையை விளக்கி, உங்கள் குறங்களை நினைத்து நீங்கள் அஞ்ச வேண்டா. என்னை வந்தடையுங்கள். யான் உங்களை ஏற்றுக் கொள்வேன். என்பது அன்பைக் காட்டும் வாத்சலயத்தின் விளக்கம் என்று எழுதியுள்ள பான்மை நம்மையெல்லாம் கவர்கின்றது. இதே கருத்தை நாவுக்கரசர், "பிழைத்தோர் பிழைப்பு அறியவல்ல அடி" என்று இறைவனுடைய திருவடிகளைப் புகழ்ந்து பாடுகின்றார். திருப்பதிகளின் பெருமைகளை எடுத்து விளக்கியிருக்கும் தன்மை நம்மையே அறியாமல் அத்திருத்தலங்களுக்குச் சென்று பார்க்க வேண்டுமென்ற அவாவினை நம்மிடம் எழுப்புகின்றது. குறிப்பாக, தலைச்சங்காடு என்ற திருப்பதியை திரு. ரெட்டியார் அவர்கள் உதாரணத்தோடும், தகுந்த ஆதாரங்களோடும் விளக்கி, இவ்விடம் ஒரு காடாக இருந்ததாகவும், காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து சிறந்த சங்குகள் இங்கு விற்பனைச் செய்யப்பட்டனவாகவும், அதனால் இந்த இடம் தலைச்சங்கம் என்று பெயர் பெற்றுப் பிறகு தலைச்சங்கக்காடு - தலைச் சங்காடு என்று மருவியது என்பதனை அழகாக எடுத்து விளக்குகின்றார். இத்தகைய அருமையான விளக்க உரைகள் எம்பெருமான் எழில் உருவத்தின் தத்துவங்களையும், அவர் எழுந்தருளியுள்ள திருப்பதிகளின் பெருமைகளையும் எடுத்து இயம்புகின்றன. பேராசிரியர் டாக்டர் சுப்பு ரெட்டியார் அவர்கள் நல்ல தமிழறிஞர். அறிவு எப்போதுமே ஒய்வதில்லை. உள்ளத்தில் இளமையும், அதன் காரணமாகச் சிந்திக்கும் திறமையும், இவற்றிற்கெல்லாம் மேலாக ரெட்டியார் அவர்களுடைய ஆழ்ந்த