பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி அழுந்துார் நின்ற அஞ்சனக் குன்றம் 7] அந்தர்யாமித்துவ எம்பெருமானைச் "செவ்வாய் முறுவல் செய்தருளி, மாடுவந்து, என்மனம் புகுந்து நின்றார்” (7.5-6) என்றும், "அடியேன் மனம் புகுந்து என் நீலக் கண்கள் பனிமல்க நின்றார்” (7.5-7) என்றும், “என் நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார்” என்றும் சிந்தித்து மகிழ்கின்றார். அர்ச்சாவ எம்பெருமான்களில் ஆமருவி அப்பனைத் தவிர, திருக்குடந்தைப் பெருமான், நறையூர் நம்பி ஆகிய எம்பெருமான்களையும் அநுபவிக்கின்றார். ஆழ்வாரின் நறையூர் நம்பி அநுபவம் அழகிய மணவாளச் சீயர் "இந்த ஆழ்வார் வாக்கினின்றும் நறையூர் நம்பி நூறு பாசுரங்கள் பெற்றிருந்தும் மனநிறைவு பெறாதவனாய் மீண்டும் வந்து முகங்காட்டினதைக் கண்டு ஆழ்வார் திருநறையூர் நம்பீ (7-7-4) என்கின்றார். திருவிண்ணகரில் ஆழ்வார் எழுந்தருளியிருக்கும்போது நம்பி எதிர்கொண்டு சென்றதனால் திருநறையூர்த் தேனே (63-3) என்று பேசினார்." ஆழ்வார் திருநறையூரினின்று மீண்டு திருவழுந்துர் செல்லுமளவும் கூட வந்து வழிவிட்டுத் திரும்புகையாலன்றோ “நறையூர் நம்பி. அழுந்துர் மேல்திசை நின்ற அம்மானே!” (7-7) என்று பேசுகின்றார் எல்லாப் பாசுரங்களிலும், கசேந்திர மோட்சம் எல்லா ஆழ்வார்கள் மனத்தையும் கவர்ந்துள்ளது. இந்த ஆழ்வாரும் இதற்கு விலக்கல்லர். இந்த யானை நிகழ்ச்சியை ஆழ்வார், ‘குலவேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள் செய்த போர் ஏறு" (7.64) என்றும், குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று நிலத்திகழும் 'மலர்ச்சடர்ஏய் சோதி என்ன நெஞ்சு இடர்தீர்த் தருளியளன் நிமலன் காண்மின்" (அணுங்கி - அஞ்சி) என்றும் போற்றிப் புகழ்வர். வைணவ தத்துவமாகிய சரீர - சரீரி பாவனையும் திருவழுந்துர்பற்றிய இவ்வாழ்வாரின் பாசுரங்களில் இடம் பெறுகின்றது. பகலும் இரவும் தானேஆய் பாரும் விண்ணும் தானேஆய் நிகரில் சுடரில் இருளாகி நின்றார்" 17. இப்பாகர நயத்தைச் சோழ நாட்டுத் திருப்பதிகள் முதற்பகுதி கட்டுரை - 12) காண்க. 18. பெரி. திரு. 7.8:3 19. பெரி. திரு. 7.5:5