பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இதில் பாரும் விண்ணும்தானே ஆய்' என்பதனால் அசித்து, எம்பெருமானின் உடலாய்த் திகழ்கின்றது என்று அவனது திவ்வியமங்களத் திருமேனி காட்டப் பெறுகின்றது. மேலே காட்டப் பெற்ற இறைவனின் ஐந்து நிலைகளாலும் வைணவ தத்துவம் புலனாகின்றது. இங்ங்னம் அணி அழுந்துர் நின்ற அம்மானையும் ஆழ்வார் பாசுரங்களையும் அநுபவித்த நிலையில் திவ்விய கவியின் திருப்பாசுரமும் நம் நினைவிற்கு வருகின்றது. அடியாராய் வாழ்மின் அறிவிலாப் பேய்காள் செடியார் வினையனைத்தும் தீரும் - முடிவில் செழுந்துரத் தன்னெனினும் செங்கண்மால் எங்கள் அழுந்துாரத் தன்னணியன் ஆம்." (அறிவு - புத்தி; செடியார் - செடிபோல் அடர்ந்துள்ள தீரும் - ஒழியும்; அத்தன் - சுவாமி, அணியன் - அணிமையிலிருப்பவன்) என்ற பாடலையும் ஓதி உளங் கரைகின்றோம். “மெய்யடியாராக வாழ்பவர்கட்கு இருவினையும் எம்பெருமான் அருளால் தீயினில் தூசாகும். அவரது இறுதி நாளில் எம்பெருமான் கருடன்மேல் சேவை சாதித்துத்தானே வழித்துணையனாகி நற்கதி சேர்ப்பன் என்கின்றார் திவ்வியகவி. பிரம்மானந்தம் பெற்ற நிலையில் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். குறிப்பு : தேரழுந்துர்தான் கம்பன் பிறந்த ஊர். இந்த ஊருக்குத் தென் மேற்குக் கோடியில் கம்பன் மேடு என்று ஒர் இடம் உள்ளது. அங்குப் புதையியல் துறையினர் ஒரு நீலப் பலகையில் இதைக் குறிப்பிட்டுள்ளனர். இருப்பூர்தி நிலையத்திலும் தேரழுந்துர் - கம்பன் மேட்டுக்கு இங்கே இறங்குங்கள் என்று ஓர் அறிவிப்புப் பலகையையும் வைத்துள்ளனர். 20. நூற். திருப். அந். 10