பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் பொருட்டாக இருக்கும்.’ அந்தர்யாமித்துவமானது, உயிர்களின் உள்ளே புக்கிருந்து அவர்களின் எல்லாச் செயல்கட்கும் தான் ஏவுபவனாக இருப்பதோடன்றி அவர்கட்குத் தியான ருசி பிறக்கும்போது தியானத்திற்கு உரியவனாதற்காகவும், அவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் அழகே உருவெடுத்தாற் போன்ற மங்களகரமான திருமேனியுடன் எல்லா அணிகளாலும் அலங்கரிக்கப் பெற்றவனாய் பெரிய பிராட்டியோடு கட்டைவிரல் அளவாக இதயத் தாமரைக்குள்ளே எழுந்தருளியிருக்கும் இருப்பாகும். அர்ச்சாவதாரம் என்பது, 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்’ என்ற பொய்கையாழ்வாரின் திருவாக்குப்படி அன்பர்கள் எதைத் தனக்குத் திருமேனியாகக் கொள்ளு கின்றனரோ அதனையே இறைவன் தனக்கு வடிவமாகக் கொண்டுள்ள நிலையாகும். குணங்கள் நிறைந்துள்ள இந்த அர்ச்சாவதாரமே இருட்டறையில் விளக்குப் போலே ஒளிர்ந்து காணப்படும் என்பது ஆழ்வார் பெருமக்களின் கருத்தாகும். இவற்றுள் பரத்துவம் முதலான நிலைகளின் அருமையையும் அர்ச்சாவதாரத்தின் எளிமையையும் எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குவர் பிள்ளை உலக ஆசிரியர். தண்ணீர் வேட்கை கொண்டவனுக்கு வேறு இடங்கட்குச் செல்ல வேண்டாதபடி தான் நிற்கும் இடத்தில் உண்டாயிருந்தும் கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது பருகக் கிடையாத பூமிக்குள்ளே இருக்கின்ற தண்ணிரைப் போல் ஆயிற்று அந்தர்யாமித்துவம். கண்டு பற்ற வேண்டும்’ என்று அவாக்கொண்டவனுக்கு மனத்திலிருந்தும் ‘கட்கிலி' - கண்களால் காண இயலாதபடி, அட்டாங்க யோக முயற்சியால் மட்டிலுமே காண வேண்டும் படியாக இருப்பது இந்நிலையில் இருக்கும் இறைவனின் நிலை. தண்ணீர் வேட்கை கொண்டவனுக்கு அண்டத்திற்குப் புறம்பே பெருகிக் கிடக்கின்ற ஆவர்ண நீர்போல் ஆயிற்று லீலாவிபூதிக்கு அப்பாற்பட்டிருக்கும் பரத்துவ நிலை. அப்படி மிக்க நெடுந்துரம் அன்றியே இந்த உலகிலேயே இருக்கச் செய்தும் தண்ணிர் வேட்கை கொண்ட அவனுக்குச் சென்று அடைய முடியாததான பாற்கடல் போல் ஆயிற்று. கேட்டிருக்கும் அத்தனையல்லது சென்று காண அரிதாம்படி இருக்கும் வியூகநிலை. மிக அண்மையிலிருந்தும் அந்தக் காலத்தில் இருந்தவர்கட்குப் பருகலாம்படியாய், வேறு காலத்தில் இருப்பவர்கட்குப் பருகுதற்கு அரிதாம்படியான 2. பகவத் கீதை, 4:8 3. முதல. திருவந். 44 4. திருவாய். 7.2:3