பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றிய பொது சொற்பொழிவுகளுக்கும், உரைகளுக்குப் ஏற்பாடு செய்தலும் நாடு தழுவிய கல்வி முயற்சிகளில் பொது மக்கள் பங்கு கொள்ள வழிவகை செய்யும். அடுத்த சில பத்தாண்டுகளுக்காவது ஒவ்வொரு வளங் முக நாடும் லெனின் கூறிய அறிவுரையாகிய படியுங்கள்; படியுங்கள்; மேலும் படியுங்கள்' என்பதைப் பிறழாமல், பின்பற்றுதல் நல்லது. நிகழ்கால சமுதாயத்தின் சிக்கல் கள் உட்பட பலவற்றைப் பற்றி, கற்பதிலேயே கவனம் முழு வதையும் செலுத்துமாறு, வளர்முக நாடுகளின் மாணவர் களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவ சமுதாயத்திடை, கல்வியின்பால் உள்ள கருத்தைச் சிதைப்பதில், அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்குப் பதில், மாணவர்களை தீவிர அரசியல் நடவடிக்கைகளில் தள்ளுவதில்லை என்னும் 'பெரிய மனித' உடன்படிக்கைக்கு வருமானால், ஆழ்ந்து கற்பதற்கும் விரைந்த கல்வி வளர்ச்சிக்கும் ஏற்ற சூழ்நிலை யை உருவாக்கி, மெய்யாகவே மதிப்புள்ள, நிலையான, தொண்டினைச் செய்தவை ஆகும். வளர்முக நாடுகளுக்கு முன்னர் உள்ள பிரச்சினைகளோ மலை போன்றவை. சோவியத் ஒன்றியத்திலும் 1917-ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சியின்போது, நிலைமை இப்படித் தான் - ஏன் இன்னும் மோசமாக-இருந்தது. இன்று, நாமே இருட்டில் தடுமாறத் தேவையில்லை என்பதையும் நினைவுபடுத்திக் கொள்வோமாக. நாம் சோவியத் பொரு வியல் முறையை பின்பற்றினாலும் பற்றாவிட்டாலும், கல்வி பற்றி அது கற்பிக்கும் பாடங்கள் விலை மதிப்பில்லா தவை; அவற்றை சமதர்மத்தைப் பின்பற்றாத நாடுகளும் பின்பற்றலாம். நம் முன்னே உள்ள பிரச்சினைகள் பல வாயினும், நம்முடைய விளைவாற்றலும் மிக உயர்ந்தது. எனவே. எல்லோர்க்கும் நல்ல கல்வி கொடுப்பதற்காக, நம்மிடமும் நம் எதிர்காலத்திடமும் நம்பிக்கை கொண்டு முன்னேறுவோமாக, 4.18 An ^ - JUL 1078