பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டால்ஸ்டாய் கதைகள்


அதைத் தரித்துக் கொண்டதும் அவன் ஆழ்ந்த நெடுமூச்செறிந்தான். தன்னை உபசரித்தவர்களுக்கு நன்றி அறிவித்து விடைபெற்றுக் கொண்டு, கதகதப்பும் வெளிக்சமும் நிறைந்த அறையிலிருந்து நடந்து, குளிரும் இருட்டும் மண்டிய நடைபாதையை அடைந்தான் நிகிட்டா. அங்கேகூடக் காற்று ஊளையிட்டு ஊர்ந்தது. ஆடி அசைந்து கொண்டிருந்த கதவின் கீறல் வழியாகப் பனி வந்து தாக்கியது.

அங்கிருந்து முற்றம் போய்ச் சேர்ந்தான் அவன். முற்றத்தின் நடுவிலே குதிரைக்கு அருகில் பெட்ரூஷ்கா ஆட்டுத்தோல் அங்கி அணிந்து நின்றாள். பால்ஸன் வாசகத்தில் உள்ள சில வரிகளை உச்சரித்துக் கொண்டிருந்தான் அவன். இளநகை பூத்தவாறே அவன் சொன்னான்:

பனியொடு புயலைப் பதுக்கிடும் வானம்;
பனிச்சுழல் பலப்பல சூறையாய் சாடும்,
வெறிநாய் போல் அலறிடும் காற்றே
மறுகணம் பிள்ளைக் குரலால் அழுவது கேளீர்!

குதிரையின் கடிவாளத்தைச் சரிசெய்து நின்ற நிகிட்டா அதை ஆமோதித்துத் தலையசைத்தான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச்சை வழி அனுப்ப வந்த கிழவன் வெளிச்சத்திற்காக ஒரு விளக்கை எடுத்து வந்தான். நடை பாதையில் அடி எடுத்து வைத்ததுமே அது அணைந்து போய்விட்டது. பனிப்புயல் முன்னை விட மும்முரமாகி விட்டது என்பது முற்றத்திலேயே நன்கு தெளிவாயிற்று.

‘ஆ, சரியான பனிக்காலம்தான்! எவ்வளவு முயன்றாலும் நாம் அங்கே போய்ச்சேர முடியாமல் ஆகிவிடுமோ என்னவோ. இருந்தாலும் வேறுவித-