பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

தஞ்சை மராட்டிய

கட்டின பிற்பாடு அந்த சயிது[1] யென்கிறவன் கிறுத்திறமத்திலே யிருந்தான்.

(13) பிரதாபசிங்கரின் ஆட்சி

இதுவுமல்லாமல் இவன்[2] அகிறுத்தியம் பண்ணிக் கொண்டு வந்ததென்னவென்றால் யெகோஜி ராஜா தஞ்சாவூர் றாட்சியத்துக்கு முதல் அதிபதியான பிற்பாடு இதுக்கு முன்னே பண்ணியிருக்கிற தற்ம்மமும் தஞ்சாவூர் றாட்சியத்திலே வெகுதேவாலையங்கள் காவேரி தீரத்தில் வெகு பிறாமனாள் வாசமாயிருக்கிறார்களென்று அக்கிறாரம் கட்டிவிக்கிறது, தேவாலையும் கட்டிவிக்கிறது, பிறாமணாளுக்கு சறுவமானியங் கொடுக்கிறது. யெக்கியம்[3] பண்ணிவிக்கிறது, அன்ன சத்திரம் போடுவிக்கிறது, இந்த விதமாய் அனேக தற்மங்கள் யெகோஜி மகாராஜா நாள் முதல் பரம்பரையாய் பண்ணிக் கொண்டு வந்தரர்கள். அப்பால் பிரதாபசிம்ம ராஜா பட்டத்துக்கு வந்த நாள் முதல் விசேஷ தற்மம் பண்ணிக்கொண்டு வந்தார். இந்த தற்மத்துக் கெல்லாம் சயிது விரோதம் பண்ணிக் கொண்டு வந்தான். இதுவுமல்லாமல் தான் துலுக்க சாதியாக யிருந்தும் கற்ணாட்டச் சாதி[4] தேவடியாள் கோவில் தேவடியாளைக் கெடுத்துப் போட்டான். அதிலே ஒருத்தி மொஹனா என்கிற தாசியைக் கெடுத்துப் போட்டு அவளைத் தம்முடைய வீட்டிலே கொண்டு போய் வைத்துக் கொண்டான். இப்படிக் கொத்த துஷ்கிருத்தியமும் கிறுத்திறமும் மஹாறாஜாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தும் தாம் நூதினமாய் றாச்சியத்துக்கு வந்து இருக்கிறோம் என்று அந்த சயிந்துக்கு தெண்டினை பண்ணாமல் சிறிது நாள் வரைக்கும் அவனுடைய அதிகாரமும் நடப்பித்தார். ஆகிலும் அந்த சயிது தன் கிட்ட பவுசுதார்[5] அதிகாரமும் கோட்டை கில்லேதாரத்துவமும் சமஸ்தான சிட்டினிசும்[6] இப்படிக் கொத்த பிறபல உத்தியோக மெல்லாம் தன்னுடைய சுவாதீனத்திலே இருக்கிற படியினாலே இந்த அதிகாரத்தின் பலத்தினாலே முன்னாலே வெள்ளாட்டி பிள்ளை சுபானி என்கிறவனுக்கும் ராஷ்சியம் கொடுத்தோம். மறுபடியும் அவனை கையிது பண்ணிப்போட்டு பிறதாபசிம்ம றாஜாவுக்கு ஆகும்படியாய் பண்ணினோம். முன்னாலே பாவாசாயபுராஜா வுடைய சரிக்கல்[7] சித்தோஜி முதலானவர்களை காட்டு ராஜாவைக் கொண்டு சித்திரவதை பண்ணி வைத்தோம். இன்னம் நாம் நினைத்ததெல்லாம் பண்ணிப்


  1. சயிது - சையிந்து (போ. வ. ச. பக். 87)
    குறிப்பு: திருமுடி சேதுராமன் சுவடியில் காட்டு ராஜாவைப் பற்றியோ, பாபா சாகேபுக்குப் பிறகு அவர் மனைவி சுஜான்பாயி ஆட்சி யெய்தியது பற்றியோ குறிப்பிடப் பெறவில்லை. மேலும் பாபா சாகேபு சகம் 1861இல் இறந்தார் என்றும் அவர்க்குப் பிறகு அவர் தம்பி பிரதாப் சிங்கர் பட்டம் பெற்றார் என்றும் அச்சுவடி கூறும் (பக்கம். 302-3).
  2. இவன் - சயிது என்ற கில்லேதார்
  3. யெக்கியம் - யக்ஞம் - யாகம் - வேள்வி
  4. கற்னாட்டச்சாதி - கர்நாடக சாதி (டி3762)
  5. பவுசுதார் - ஃபவுஜ்தார்-சேனைத்தலைவன்
  6. சிட்டினிசு - Chitnis, அரசனது செயலர் (கே. எம். வே. பக். 76)
  7. சரிக்கல் - சருக்கில் (டி3119) - சர்க்கேல்- தலைமையான அலுவலர்; மந்திரி; Chamberlain of the Royal Household; Sirkale was another name for domestic minister - (Subramanian, Page 78)