ஆசைத்தம்பி தாய் மகனின் சம்பாத்தியத்தைக் கண்டு அளவு கடந்த ஆனந்தப்பட்டாள், ஆனால்- நாற்பது ரூபாய் குடும்பத்தைக் காப்பாற்றுமா? குமாரும் படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. பாலை வனத்திலேயே ஒரு சிறு பலசரக்கு மளிகை வைத்தான் குமார்! அதோடு மிகவும் உயர்தரமான காளி மார்க் சோடா கலரின் ஏஜென்சியும் சுற்றியிருந்த கிராமங் களுக்கு கிடைத்தது. அப்படி இப்படி என்று குமார் வைத்த கடையிலும் மாதம் ஐம்பது ரூபாய்க்கு மேல் கிடைத்துக்கொண்டிருந்தது. நடராஜன் குமார் கூட்டு முயற்சியால் நாடார் குடும்பம் ஓரளவு விருத்தி அடைந்து வந்தது. மூன்றாவது பையனான சேகரும், இளையவனான மாணிக்கமும் ஒரு கவலையும் இன்றி பள்ளியிலே படித்து வந்தனர். சேகரை டாக்டராக்கி தன் தந்தையின் ஆவலை பூர்த்தி செய்யவேண்டும் என நடராஜன் பல திட்டங்கள் போட்டான். நடராஜனின் கெட்டிக்காரத்தனத்தை உணர்ந்து பலர் அவனுக்கு பெண் கொடுக்க நீ நான் என்று முந்திக் கொண்டு வந்தனர். பார்வதி என்ற பெண்ணை நடராஜன் திருமணம் செய்துகொண்டான். 4. மூன்று மதினிகள் நடராஜனுக்கு கல்யாணம் முடிந்தபின் அவனுக்கு சம்பளம் எண்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. 'குமார் அன் சன்ஸ் உரிமையாளரை எல்லோரும் தர்மப்பிரபு என்று சொன்னார்கள். ஆனால் கள்ளமார்க்கெட்டிலே
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/10
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
