பக்கம்:தந்தையும் மகளும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

தந்தையும்

போலத் தெரிகிறதோ அந்த இடத்தை ஆகர்ஷண கேந்திரம் என்று கூறுவார்கள்.

அந்தக் கேந்திரத்திலிருந்து கீழ் நோக்கிச் செங்குத்தாகக் கோடு இழுத்தால், அது வஸ்துவின் பாதத்திற்குள் விழுமானால்தான், வஸ்து சாயாமல் இருக்கும். அப்படிச் செங்குத்துக் கோடு பாதத்திற்குள் விழவேண்டுமானால் ஆகர்ஷண கேந்திரம் பாதத்துக்கு அருகிலேயே இருக்க வேண்டும்.

வண்டியின் பாதம் என்பது சக்கரங்களுக்கு இடையேயுள்ள பாகமேயாகும். அதனால் வண்டி குடை சாயாமல் இருக்க வேண்டுமானால் அதன் ஆகர்ஷண கேந்திரம் அந்தப் பாதத்துக்கு அருகில் இருக்க வேண்டும். செங்கல் கனமான பொருளாதலால் செங்கல் வண்டியின் ஆகர்ஷண கேந்திரம் பாதத்துக்கு அருகிலேயே இருக்கும். அதனால் தான் அது குடை சாய்வதில்லே. ஆனால் வைக்கோல் வண்டியில் வைக்கோலை அதிக உயரமாக அடுக்குவதால் அதன் ஆகர்ஷண கேந்திரம் உயர்ந்து விடுகிறது. அதனால் அது சொற்பமாகச் சாய நேரிட்டாலும் அது குடை கவிழ்ந்து போகிறது.

92அப்பா! வண்ணார துணிமூட்டை கொண்டு போகும் போது முன்பக்கமாகக் குனிந்துகொண்டு போகிறாரே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பூமியிடம் ஆகர்ஷண சக்தி என்று ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்பதையும் அது எந்த வஸ்துவையும் தன்னிடமே இழுத்துக் கொள்கிறது என்பதையும் நீ அறிவாய். ஆனல் அந்தச் சக்தி எந்த இடத்தில் இழுக்கிறது தெரியுமோ?