பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/680

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

679



மதத்துறை தலைவர்களும்‌, மதமே கூடாது என்றுரைக்கும்‌ பெரியாருக்கு. நண்பர்‌களாக உள்ளனர்‌. தம்மிடம்‌ வருகின்ற அனைவரிடத்தும் மரியாதையுடனும்‌, அன்புடனும்‌ அவர்‌ உரையாடுவார்‌.

குன்றக்குடி அடிகளாருடன்‌ பெரியார்‌ உரையாடுவது. புத்தபிட்சுகளுடன்‌ பெரியார்‌! எழுந்து நிற்பதும்‌, வரவேற்பதும்‌, உனரயாடுவதும்‌.

மிக நீண்ட நேரம்‌ சொற்பொழிவாற்றினாலும்‌, அவர்‌ பேச்சை மக்கள்‌ மிகவும்‌ விரும்பிக்‌ கேட்பது வழக்கம்‌.

கூட்டத்தில்‌ சொற்பொழிவாற்றும்‌ காட்சி.

அய்யா அவர்கள்‌ மிகச்‌ சிறந்த எழுத்தாளர்‌, தமிழகத்தில்‌ பெரும்‌ புரட்ரி உண்டாக்கிய குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை ஆகிய ஏடுகள்‌ அவரால்‌ துவக்கப்‌பட்டவை. மலிவான விலையில்‌ ஏராளமான நூல்களைப்‌ பதிப்‌பித்து, அய்யா தமது கருத்துகளைப்‌ பரப்புவது வழக்கமாகும்‌.

பெரியார்‌ எழுதுவது பத்திரிகை படிப்பது-புத்தகம்‌ விற்பது-ஆகிய பல காட்சிகள்‌.

தமது முதிர்ந்த வயதினையும்‌, பல்வேறு உடல்‌நலக்‌ குறைவுகளையும்‌ பொருட்‌படுத்தாது, அந்தப்‌ பெருமகன்‌, மக்களின்‌ நல வாழ்வு ஒன்றினையே குறிக்கோளாகக்‌ கொண்டிருந்தார்‌. அவரது பிரிவு தமிழ்‌ மக்களால்‌ தாங்கவொண்ணாத இழப்பாகும்‌.

இறுதி ஊர்வலம்‌ பெரியார்‌திடலை அடைவது.

சடலம்‌ பெட்டிக்குள்‌ அடக்கம்‌ செய்யப்படுவது.

புத்தரைப்‌ போன்றதொரு அற்புதத்‌ தலைவர்‌ இவரென அறிவார்ந்த பெருமக்கள்‌ வியந்து உரைக்கின்றனர்‌.

பெரியாரின்‌ அண்மைக்‌காட்சிகள்‌ சிலவற்றில்‌ அவர்‌ முகம்‌; பெரியார்‌ பேசுதல்‌.

தமிழ்நாடு. அரசு அந்தப்‌ பேசறிவாளருக்கு நன்றிக்‌ கடனாற்‌றியது. அன்னாரின்‌ சடலம்‌ ராஜாஜி மண்டபத்தில்‌ காட்சிக்‌காக வைக்கப்பட்டது. அரசு

போலீஸ்‌ பேண்ட்‌; 36 வெடி; மரியாதை, துப்பாக்‌கியைத்‌ தலை கீழாகப்‌ பிடித்து.