பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 21
ஈ. இக் கல்லூரியில் சமற்கிருதம் பயின்றுவரும் பதினேழு பார்ப்பன மாணவ மாணவியர்க்கென்று நான்கு சமற்கிருதப் பேராசிரியர்களை வைத்தது மன்றி, தமிழ் கற்று வருகின்ற இருநூற்று பதினான்கு மாணவர்களுக்கும் நான்கு தமிழ்ப் பேராசிரியரைக் கொண்டே தமிழ் கற்பிக்கப்பட்டு வருவதாக மேலாளர்கட்குப் போக்குக் காட்டிக்கொண்டு வருவதும்,
உ. தமிழ் மாணவர்களின் மனம் புண்படுமாறு அடிக்கடி 'அடேய், பச்சைத் தமிழா', 'அடேய் காய்ந்த தமிழா' என்று விளிப்பதும், சத்திரத்துச் சோற்றைத் தின்றுவிட்டுச் சும்மா இருக்க முடிய வில்லையா? என்று அவர்களைப் பலவாறாக இழிவுகூறி வருத்தி வருவதும்,
ஊ. தமிழ் பயில வரும் தமிழ் மாணவர்களை வடமொழி பயிலுமாறு கட்டாயப் படுத்துவதும்,
எ. பார்ப்பனர் கொண்டாடத் தக்க விடுமுறைகளையே தந்து, பிற சமயத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்கான விடுமுறைகளை (அவை அரசினராலும், பல்கலைக் கழகத்தாலும் வழங்கப் பெற்றவையா யிருப்பினும் கூட)த் தராமல் கல்லூரி நடத்திப் பிற சமய, குலங்களைச் சார்ந்த மாணவர்களிடம் ஒரகம் காட்டுவதும்,
ஏ. தமக்கு வேண்டிய ஓரிரண்டு ஏழைத் தமிழ் மாணவர்களைத் தம் பக்கல் வைத்துக்கொண்டு, அவர் தம்மைக் கொண்டு பிற மாணவர்கள்மேல் குற்றங்களை சாற்றுவதும், அவற்றைப் பலர் முன்னிலையில் மெய்ப்பித்துக் காட்டி அம் மாணவர்களைத் தண்டிப்பதும்.
ஐ. பிற கல்லூரிகளினின்றும் அக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டி வரும் சொற்போட்டி, எழுத்துப்போட்டி போன்ற இலக்கிய நடவடிக்கைகளின் அறிக்கைகளைத் தமிழ் மாணவர்களுக்குக் காட்டாமல் இருட்டடிப்புச் செய்து, அவர்களை அந்நடவடிக்கைகளில் கலக்க வொட்டாமல் மாணவர்தம் அறிவு வளர்ச்சியையும், உரிமை உணர்வுகளையும் தடைப்படுத்துவதும்,
ஒ. தனித்தமிழில் பேசியும் எழுதியும் வரும் தமிழ் மாணவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பற்பல கேடுகளைச் செய்ததும், செய்து வருவதும்,
கல்லூரித்தலைவர் திரு. இராசகோபாலன் அவர்களின் தலையாய திருவிளையாடல்களாகும் இத்துணையளவு கொடுமைகளிருந்தும்