84
பெருமானாரின் வேண்டுகோள் ஏற்று, ஐம்பது வேளைத் தொழுகையை ஐந்துவேளைத் தொழுகையாகக் குறைத்து எளிமைப்படுத்தினான். அவ்வாறே முன்பு கட்டளையிட்டிருந்த ஆறுமாத நோன்பை ஒரு மாத நோன்பாகவும். நாலிலொரு பங்காக இருந்த ஜக்காத்தை நாற்பதில் ஒரு பங்காகவும் ஆண்டுதோறும் நிறைவேற்ற வேண்டிய ஹஜ் கடமையை வாழ்நாளில் ஒருமுறையாகவும் அல்லாஹ் குறைத்து அருள செய்தான். இதனை,
"என்று ஒருநாளைக்கு ஐந்து நேரம
இலங்கித் தொழுது கொண்டு அதபுடனே
நன்றாய் கபிர் செய்து சக்காத்தையும்
நாற்பதில்ஒன்று தான். அளித்து
சென்ற வருட த்தில் றமுலானிலே
தீரவொரு மாதம் நோன்பு வைத்து
நன்றாய் வயதிலே ஒரு ஹஜ்ஜூதான்
நடந்து செய்திடப் போதுமென்றான்."
இவ்வாறு அல்லாஹ்வால் இறைநம்பிக்கையாளர்களாகிய முஸ்லிம்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஐம்பெரும கடமைகளில் இறைநம்பிக்கையாம் கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத்து ஆகிய நான்கு கடமைகளை இனிது நிறைவேற்றத்தக்க புனித மாதமாக றமலான் அமைந்தது.
தமிழில் இயற்றப்பட்டுள்ள நாமா இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு காயல் ஷாமுனா லெப்பை எனப்படும் ஷாமு நைனா லெப்பை புலவர் பாடிய 'இருஷாது நாமா' வாகும்.
தன்னை வணங்குவதற்கென்றே இறைவன் மனிதனைப் படைத்தான் என்பது மரபு. இறைவனின் விருப்பத்துக்கு மாறாக இறைச் சிந்தனையின்றி அல்லாஹ்வினிடத்து அச்ச-