பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







எழுத்துகளைத் தனியாகக் கூறும்போது சரியான சரியான முறையில் ஒலித்துவிட்டு நாம் பேசும்போது இவ்வெழுத்துகளின் ஒலிப்பை மறந்துவிடுகிறோம். அவ்வாறின்றி, இவ்வெழுத்துகளின் துல்லியமான ஒலிப்பினை மனத்தில் நிறுத்திப் பேசிப் பழகினால், நாளடைவில் நம்மையறியாமலே அவை நம் பேச்சில் சரியான ஒலிப்புடன் வெளிவரும்.

1.9.1 'ல', 'ழ', 'ௗ' கரப் பயன்பாடு

பிழையாக உச்சரிக்கப்படும் எழுத்துகளுள் முக்கியமானது. லகர, ளகர, ழகர எழுத்துகளே ஆகும். தமிழ்மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் எழுத்து ழகரம், வேறு எந்த மொழியிலும் இல்லாத எழுத்து இது. ஆனால் சில சமயங்களில் இது தவறாக உச்சரிக்கப்படுகிறது.

ணகர, னகரம் போல எந்த எழுத்துக்குப் பின் வரும் என்று துல்லியமாக நம்மால் சொல்ல இயலாது. தொடர்ந்த வாசிப்பும், சொற்பயிற்சியுமே லகர, ளகர, ழகரப் பயன்பாட்டை அறிந்துகொள்ள உதவி செய்யும்.

1.9.2 'ல', 'ழ', 'ள' ஒலி வேறுபாடு

லகர, ளகர, ழகர எழுத்துகள் சொற்களில் மாற்றிப் பயன்படுத்தப்பட்டால் பொருள் முழுவதுமாக மாறிவிடும். அதனைப் பின்வருமாறு காணலாம்.

1. அலகு -

2. அழகு

பறவையின் மூக்கு வனப்பு

கமலா அழகாகப் படம் வரைந்தாள் என்று எழுதுவதற்குப் பதிலாகக் கமலா அலகாகப் படம் வரைந்தாள் என்று எழுதிவிட்டால் பொருள் எத்தனை மாறிவிடும் என்பதைப் பார்த்தீர்களா?

நேராது.

மேலும் அதிகமாக அனைவரையும் குழப்பும் சொற்கள் ஒலி, ஒளி இரண்டும்.

சூரியன் ஒலிருமா? ஒளிருமா?

சூரியன் ஒளிருமே தவிர ஒலிராது. லகர, ளகர சொற்களுக்கான பொருளறிந்தால் இப்பிழை

ஒலி

ஓசை

ஒளி

வெளிச்சம்

ஒழி

நீக்கு

விளக்கு ஒளிரும்.

மணி ஒலிக்கும்.

தீய பழக்கத்தை ஒழி.