34
தமிழைப் பிழையின்றி எழுதுவோம்
நிகழ்கால இடைநிலை
உண்கிறான், ஆடுகின்றாள், செல்லா நின்றார், (செல்கிறார் என்பது பொருள்) இந்த வினைமுற்றுச் சொற்கள் நிகழ்காலம் உணர்த்துகின்றன. நிகழ்காலம் உணர்த்தும் இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று ஆகிய மூன்றும் ஆகும். இக்காலத்தில் 'ஆநின்று' என்ற இடைநிலை, பெரும்பான்மையாக வழக்கில் இல்லை.
எதிர்கால இடைநிலை
காண்பார், தேடுவார்
இவ்விரு வினைமுற்றும் எதிர்காலம் உணர்த்தும் சொற்களாகும். இச்சொற்களில் உள்ள ப், வ், ஆகிய இரண்டும் எதிர்காலம் உணர்த்தும் இடைநிலைகள்.
2.2.4 சந்தி
இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி. நடத்தல் என்னும் பகுபதம் நட + த் + தல் என்று பிரிந்து வரும்.
நட - பகுதி த் – சந்தி தல் – விகுதி
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் 'த்' சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.
2.2.5 சாரியை
இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் 'சந்தி'க்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.
சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.
-
வந்தனன் என்னும் சொல் 'வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்' வா பகுதி த் - சந்தி 'ந்' ஆனது விகாரம் த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி
'த்' இடைநிலைக்கும், 'அன்' விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்
2.2.6 விகாரம்
விகாரம் என்பது தனி உறுப்பு இல்லை. பகுதி, விகுதி, முதலான உறுப்புகள் சேர்தலால் ஏற்படும் மாற்றத்தை விகாரம் என்கிறோம்.
சான்று:
கண்டான் = காண் (கண்) + ட் + ஆன்