பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

59






2.5.2.4 உரிச்சொல்


குணம்)

பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வருவது உரிச்சொல் ஆகும். (பண்பு இது பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும். செய்யுளுக்கு உரியதாய் வரும். மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வதை உரிச்சொல் என்பர்.

எ.கா.

கடிமனை.

நனி சிரித்தான்.

'மனை' என்னும் பெயர்ச்சொல்லையும் 'சிரித்தான்' என்னும் வினைச்சொல்லையும் சார்ந்து நின்று, முறையே, 'காவல் மிகுந்த மனை(வீடு)' (கடி-காவல்) 'மிகவும் மகிழ்ந்தான்' (நனி-மிகவும்) அவற்றின் தன்மையை தன்மையை எடுத்துரைக்கின்றன. மேலும், செய்யுளுக்கே உரியதாகவும் விளங்குகின்றன. ஆதலால் இவை (கடி, நனி) உரிச்சொற்கள் எனப்படுகின்றன. (Attributive)

என

உரிச்சொல்லானது, ஒரே பொருள் தரும் பல உரிச்சொல் எனவும், பல பொருள் தரும் ஓர் உரிச்சொல் எனவும் இரு வகைப்படும்.

அ. ஒரே பொருள் தரும் பல உரிச்சொல்

சால, உறு, தவ, நனி, கூர், கழி இவை யாவும் 'மிகுதி' என்னும் ஒரே பொருள் தருவன.

எ. கா : சாலப் பேசினான். உறு புகழ். தவச் சிறந்தது. நனி தின்றான்.

ஆ. பல பொருள் தரும் ஓர் உரிச்சொல்

'கடி' என்னும் சொல்லானது காப்பு, கூர்மை, மணம், விளக்கம் அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஆர்த்தல், வரைவு, மன்றல், கரிப்பு ஆகிய பல பொருள்களைத் தரும்.

2.6 சொற்களஞ்சியம்

சொற்களஞ்சியம் என்பதைச் சொற்களின் தொகுப்பு எனக் கூறலாம். நாம் காலை முதல் இரவு வரை பல சொற்களைக் கேட்கிறோம். பலரிடம் பேசுகின்றோம். பல சொற்களைப் படிக்கின்றோம். எழுதவும் செய்கிறோம். அவற்றுள் பல சொற்கள் நமக்கு நன்கு தெரிந்தவையாகவும் சில சொற்கள் புதியவையாகவும் இருக்கலாம். நமக்குத் தெரிந்த சொற்களை

மட்டுமே மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோமானால், அஃது பயன்படுத்தும்

சொற்களஞ்சியத்திலுள்ள சொற்களாகவே இருக்கும். அவ்வாறின்றிப் புதிய சொற்களை நாம் அறிந்திருந்தாலும் அவற்றை அடிக்கடி பயன்படுத்தாமல் இருந்தால், அவை அறிந்த சொற்களஞ்சியத்திலுள்ள சொற்களாக மட்டுமே இருக்கும்.