வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர் 79 யிலும் பேரறிஞராய்ச் சிறப்புப் பெற்று தாகூர் சட்ட விரிவுரை யாளர் என்னும் பெருமையுடன் விளங்கினார். இந்த நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலுங் கூட, தமிழ் நன்கு கற்றவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவியது. தமிழ் மொழி இலக்கண, இலக்கிய மேம்பாடுடைய தொன் மொழியே எனினும் சமய நூல்கள், தத்துவ நெறி விளக்கங்கள், தெய்வ வழிபாட்டுக்கான மறை மொழிகள் ஆகிய பலவும் வடமொழியிலேயே இயற்றப்பட்டுள்ளனவாகையால், அவை சமக்கிர தத்திலிருந்தே தமிழர்க்கு வாய்த்த செல்வம் என்பதும், வாழ்வை ஈடேற்றும் சமய அடிப்படை அடிப்படை விளங்கும் மொழி எதுவாயினும் அம்மொழி (வடமொழி) தமக்கு இன்றியமை யாதது என்பதும், அத்தகு வடமொழி பல்லாற்றானும் உயர் வுடைய தெய்வ மொழியே என்பதும், அதனைத் தாம் கற்காவிடினும் அதன் கருத்து அறிந்து தெளியக் கூடாவிடினும், அதனை நீக்குதல் ஆகாது என்பதும் அவர்தம் நம்பிக்கையாக வேரூன்றி யிருந்தது. சைவ சமயத்தவரும், மதத்தவரும், வேறு சில சமயக் கோட்பாடுடையவர்களும், சார்புடைய தமிழ்நூல்கள் தமது சமயச் பெற்றிருப்பினும், அவற்றுக்கெல்லாம் மூலமாகச் சுட்டப்படும் நூல்கள் பல வடமொழியில் விளங்குவது கொண்டு அதனைப் பெரிதும் மதித்ததோடு, தமிழைப் போற்றவும் தவறி நின்றனர். வைணவ பலவற்றைப் ஆராய்ச்சித் திறன், தெளிவு, துணிவு, குறிக்கோள் ஆகிய வற்றால் மறைமலை அடிகளாரை ஒத்து விளங்கிய கா.சு.பிள்ளை அவர்கள், சமயப் பற்றோடு விரவிநின்ற வடமொழி மயக்கத் தைத் தெளிவித்து அதன் ஆதிக்கத்தை அகற்றுதற்கு ஆற்றிய அறிவுப் பணி தனிச் சிறப்புடையதாகும். மேலைநாட்டவரின் ஆராய்ச்சிக் கருத்துகளை எல்லாம் ஒப்புநோக்கி உண்மை கண்டு, தமிழர் வாழ்வே தனித்தமிழ் மொழி வழியால் அமைந்த பெருமையுடையது எனவும், சமயத் துறையிலும் தமிழர்கள் வடமொழிக்கு முதன்மையும் உயர்வும் அளிப்பது தகாது எனவும் சான்றுகள் காட்டி அறிவுறுத்தினார். அவர்தம் கருத்துகளில் சில இவை :
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/100
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
