பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 " தமிழ்க்கடல் அலை ஓசை 'ஆரியர் இந் நாட்டிற்கு [இந்தியா] வருவதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகத்தோடு திகழ்ந்தனர் என்பது சரித்திர ஆசிரியர் முடிவு. தமிழ் நூல் முறைப்படி இடைச் சங்ககாலமாகிய தொல்காப்பியர் காலத்தில்தான் வடக்கிருந்து வந்த ஆரியரின் தொடர்பு தமிழருக்கு ஏற்பட்ட தாகும். தலைச்சங்க காலத்தில் [கடல் கொண்ட நாட்டில்) தமிழ் வளர்ச்சி அடைந்தபோது ஆரியத் தொடர்பு [சிறிதும்) ஏற்படவில்லை ‘“ஆரியன் கண்டாய் ! தமிழன் கண்டாய் என்னும் அடியில் [அப்பர் திருத்தாண்டகம்] மொழி வேறுபாடே குறிக்கப்பட்டது என்று கொள்ளினும் ஆரிய மொழி பேசும் மக்கள் வேறு; தமிழ் மொழி பேசும் மக்கள் வேறு என்பது அதனாற் பெறப் படும். உரையாசிரியர், 'பேராசிரியர்' 'ஆரியர் கூறுந் தமிழ்' நகைச்சுவைக்குக் காரணமாகும் என்றதும் காண்க." "இப்பொழுதுள்ள வடமொழி நான்மறைகளை வியாசர் வகுத்தமைப்பதற்கு முன்னரே தொல்காப்பியம் முழு முதல் நூலாக இலங்கிற்றென்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல் காப்பியப் பாயிர உரையில் கூறிப் போந்தனர். "இப்பொழுதுள்ள சிறந்த வடமொழி இலக்கண நூலாகிய பாணினீயம் கி. மு. 8ஆவது நூற்றாண்டுக்கு முற்பட்டது அன்றாதலின், தொல்காப்பியம் அதற்கும் முற்பட்டது என்பது தெளிவு, ஆராய்ந்து காணுமிடத்து இப்பொழுதுள்ள பண்டை இலக்கண நூல்கள் யாவற்றிலும் பழைமையும் பெருமையும் மிக்கது தொல்காப்பியமே ஆகும், 1 "தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் ஆவணி [திங்கள்] முதலாக மாதங்களை எண்ணுதல் காணப்படுதலின், அப்படி எண்ணும் வழக்கம் வான நூல் ஆராய்ச்சியால் சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று புலனாவதால் தொல்காப்பியம் அத்துணைப் பண்டைக் காலத்திலேயே தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு." "தமக்கு முன்னிருந்த பல புலவர்களின் கருத்துகளைத் தொல்காப்பியர் தொகுத்துரைத்தாராதலின், அவர் காலத்திற்கு