பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர் 81 முன்னேயே பலவகைத் தமிழ் இலக்கியங்களும் தழைத்தோங்கி யிருந்திருக்க வேண்டும். ஆதலால் அறிவு வளர்ச்சியில் எந்நாட்டினருக்கும் முன்னாகத் தமிழர் சீருஞ்சிறப்பும் அடைத் தனர் என்பது போதரும் " "மருத்துவ நூலும் தமிழர்க்குள் மிக்க நயம் வாய்த்திருந் தது. சித்தர் கண்ட முறையாதலின் சித்த மருத்துவம் என்றே பெயர் பெற்றுள்ள தனிமருத்துவ முறையாக இன்றும் விளங்கு வது கண்கூடு. " 'நீதிகளைச் சுருக்கமான மொழிகளில் திட்பமாகக் கூறுஞ் சிறப்புத் தமிழருக்கே உரியது. நீதி கூறும் மொழிகளுக்கு 'முது மொழி என்ற பெயர் தொல்காப்பியத்துள் அளிக்கப்பட்டது.' கணிதத்தில் தமிழ் வணிகர் மிகப் பேர் பெற்று விளங் கினர். எண்ணும் எழுத்தும்' - 'எண்ணென்ப ஏளை எழுத் தென்ப' என்னும் தொடர்களில் எண்ணே முதலில் நிற்றல் காண்க. தமிழில் இலக்கண நூல்கள் தனியே செவ்வையாக அமைந்துள்ளன. இயல், இசை, கூத்து என்ற முத்தமிழுக்கும் அகத்தியர் இலக்கணம் செய்ததாகக் கூறுவதுண்டு." உணவிலும், உடையிலும், கட்டிடத் தொழிலிலும், ஓவியம், சிற்பம், இசை, கூத்து, செய்யுள், இலக்கணம் முதலான பல் வேறு துறைகளிலும் ஆரியர் தொடர்பு ஏற்படும் முன்னமேயே தமிழர் மேன்மையுற்று வாழ்ந்தனர் என்பதைப் பல்கலைப் புலவர் நிலைநிறுத்தினார். வடமொழி நூல்கள் தமிழரிடையே பெற்ற செல்வாக்கு நியாயமற்றது என்பதையும், வடமொழிக் கலப்பு முறையற்றது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். தமிழ்நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களை ஆய்ந்து கொண்டு போனால், இற்றை நாளிலும் கம்பர் காலத்தில் வடசொற்கள் குறைவாகவும், சங்க காலத்தில் அதிலும் மிகக் குறைவாகவும் காணப்படும். திருவள்ளுவர் நூலில் உள்ள சுமார் பன்னீராயிரம் சொற்களுள் ஐம்பதுக்கு மேற்பட்ட வட மொழிச் சொற்கள் இல்லை என்ப. அவைதாமும் தமிழிலிருந்து வடமொழிக்குப் போயினவோ என்னும் ஐயப்பாட்டிற்கு இடந்