82: தமிழ்க்கடல் அலை ஓசை தருவன். பண்டைக் காலத்தில் (சங்ககாலம்) ஆரியக் கலப்பு மிகவும் குறைவாய் இருந்தது. அதற்கு முற்பட்ட காலத்தில், ஆரியக் கலப்பு அறவே இல்லாதிருந்திருக்கவேண்டும். கடைச் சங்க காலத்திலே, தமிழ் மக்கள் வட நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பிற தெய்வ வழிபாட்டையும் கைக் கொண்டனர். வடநாட்டினர் கூட்டுறவால் நாற்குலப் பிரிவு (வருணாசிரமம்) தலை காட்டிற்று. ஆரியக் குருமார்கள் தங்கள் மறைகளை (வேதங்களை)த் தமிழ் மக்கள் நம்பும்படி செய்து பார்ப்பனர் என்னும் பெயரையும் மேற்கொண்டனர். சமயச் சார்பான வடசொற்கள் தென்னாட்டில் மிகுதியும் வழங்கலாயின. தமிழர்கள் மணத்தைக் கந்தருவ மணத்தோடு ஒப்பிட்டுக் கூறும் வழக்கமும், வெவ்வேறு வகைத்தாய மணச் சடங்குகள் நிகழ்த்தும் வழக்கமும் ஆரியக் கலப்பின் பயன்களாமென்க, நாமெல்லாம் இந்துக்கள் - இந்து மதத்தினர் என்னும் தவருன் எண்ணமும், இந்து சமயத்தின் மூலாதார மொழி வடமொழியே என்னுங் கருத்துமே தமிழர்கள்மீது சமக் கிரதம் ஆட்சி நடத்துதற்குக் காரணமாக நின்றன. அந்தப் பொய்மையைக் களைய அவர் விளக்கிய உண்மைகள் பல. இந்து மதம் (ஹிந்து) என்ற பெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டை நூல்களில் இல்லை. உலகத்தில் மதங்களுக்குப் பெயர், வழிபடும் தெய்வத்தை வைத்தாவது சமயத் தலைவன் (வழிகாட்டி) பெயரை வைத்தாவது பிரமாண (சான்று) நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி - மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடும் கடவுள் சிவமாயின், அம்மதம் சைவ மெனப்படும். தெய்வத்தின் பெயர் விட்ணு (திருமால்) ஆயின் அம்மதம் வைணவம் எனப்படும். கிறித்தவம், புத்தம், சமணம் ஆகிய மதங்கள் சமயத்தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. சொராஸ் டிரர் மதமும், கன்பூசியசு மதமும் அத்தகையனவே. வைதிகம் சுமார்த்தம் என்னும் மதங்கள், வேதம், ஸ்மிருதி முதலிய பிராமண நூல்களின் பெயர் பெற்றன. 'இந்து' என்ற சொல் கடவுள், ஆசிரியன் (வழிகாட்டி) சான்று நூல் (பிரமாண நூல்) என்பவற்றுள் எதன் பெயரையும் பெற்றதாகத் தெரியவில்லை.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/103
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
