வடமொழி மயக்கறுத்த பல்கலைப் புலவர் 83 'சிந்து' நதிக்கரையில் இருந்தவர்களைச் சிந்து, 'ஹிந்து' என்று பாரசீகரும் கிரேக்கரும் பெயரிட்டு அழைத்தனர். அந்தப் பெயரிலிருந்தே "இந்தியா" என்ற பெயரும் ஏற்பட்டது. இந்தியாவின் பழைய மக்களை, ஐரோப்பியர் 'இந்துக்கள்' என்று அழைத்தனர். 'இந்துக்கள்' என்று குறிப்பிடப்பட்டவர் களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லோருக்கும் ஒரே மதம் இருப்பதாக எண்ணி 'இந்து மதம்' என்ற பெயரைத் தோற்றுவித்தனர். 'ஆங்கில மதம்,' 'சப்பானிய மதம்', 'அமெரிக்க மதம்' என்று மதங்கள் இருக்குமாயின் ‘இந்துமதம்' என்ற ஒரு மதமும் உண்டெனலாம். அவை இலவா தல் போல 'இந்து' என்றொரு மதமும் இல்லை. இக்காலத்தில் வடமொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வைதீகர்கள், தங்கள் மதமே இந்து மதம் என்றும் அதுவே இந்தியாவிலுள்ள எல்லா மக்களுக்கும் உரிய ம மதம் என்றும் நிலைநாட்ட முன்வந்துள்ளனர். வேதத்தையும் ஸ்மிருதி யையும் சான்றாகக் கொண்ட மதமே இந்து மதம் என்றால், அஃது இந்தியாவிலுள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமேயன்றி அஃது இந்தியர் எல்லார்க்கும் உரிய பொது மதமாகாது. இந்தியாவில் தோன்றிய புத்தம், சமணம், வைதிகம், சுமார்த்தம், சைவம், வைணவம் முதலிய எல்லாச் சமயங்களை யும் இந்துமதம் என்று கூறுதல் பொருந்தாது. இந்தியாவில் உள்ள பல சமயத்தவரையும் கிறித்தவர், முஸ்லீம்கள் உட்பட, இந்தியர்கள் என்று அழைப்பதே பொருந்தும்." அதற்கு மேலும் அவர் கூறிய விளக்கம், சமய உண்மைகள் வடமொழி வாயிலாகவே உணர்த்தப்பட்டன என்றெண்ணிக் கிடந்த தமிழரைத் தெளிய வைப்பதாகும். வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களை யுடைய, தமிழ் நூல்களையுடைய சைவ, வைணவ சமயங்களை இந்துமதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை. வேத வாக்கியங்களுக்குச் சைவத்திற்கும் வைணவத் திற்கும் ஏற்ற முறையில் பொருள் கொள்ளுதல், பைபிளுக்கும்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/104
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
