84 தமிழ்க்கடல் அபை ஓசை திருக் குரானுக்கும், சைவ, வைணவப் பொருள் கொள்ளுதல் போலாகும். வேதத்திலும் உபநிடதங்களிலும் சிற்சில இடங் களில் சைவ, வைணவக் கருத்துகள் காணப்படுதல் பற்றி அவற்றைப் பிரமாணமாகச் (சான்றாக) சைவர்களும் வைணவர் களும் கொள்ளுதல் பொருத்த மின்றாம். தமிழ்ச் சைவ, வைணவ சமயங்கள் அடிப்படையில் ஒத்த கருத்துடையன. அது தொல்காப்பியம், திருக்குறள், பரிபாடல் முதலிய சங்கநூலாராய்ச்சியாலும் தேவார, திருவாசக, திரு வாய் மொழி, திருமொழி ஆராய்ச்சிகளாலும் நன்கு புலனாகும். தமிழ்நாட்டிலுள்ள சைவ, வைணவக் கோயில்களெல்லாம் தமிழருக்கே உரியனவாம். வைதீகர்கள் (வடமொழிச் சார்பால்) கோயில் வழிபாட்டின் பகுதிகளுக்கு வைதீகத் தொடர்பும் பொருளும் கூறுதல் வழக்கம். இனிக் கோயில்களில் உள்ள (தமிழ்நெறி உடன்படாத) ஆரியச் சார்புகள் யாவை எனில் தமிழ்க் குருக்கள் தம்மை ஆரியராய் (மேல் சாதியாய்) எண்ணிக் கொள்வதும், வருண (சாதி) வரம்புகள் பற்றி இன்னின்னார் இன்னின்ன இடத்தில் நிற்க வேண்டும் என்பதும், தாழ்த்தப்பட்டவர்க்கு இடம் (அக் காலத்தில்) அளிக்காமையும், பரிசாரகம் முதலிய தொண்டுகள் சுமார்த்தரால் செய்யப்படுவதும், வடமொழி வேத பாராயணம் முதலியவையும் வேதச் சார்பான ஓமச் சடங்குமாம் என அறிக. மேலும் அவர் கூறுவது இது: "தமிழர் கோயில்களில் சமய ஆசாரியர்கள் தமிழிலேயே பாடி இறைவனை வணங்கியது போலத் தமிழிலேயே பூசனை, துதிகள் எல்லாம் நடைபெற லாயின. கோயிற் பணத்தைப் பிறமொழிப் பாராயணத்துக்கும், பிறமொழியில் பூசனை முறைகள் கற்பிப்பதற்கும் செலவு செய்தல் கூடாது. இவ்வாறு தமிழர்களிற் பெரும்பாலோர் கொண்டிருந்த சமய நம்பிக்கையோடு ஒட்டி, உறவாடி, வேர்விட்டுத் தழைத்து நின்ற சமக்கிரதத்தின் ஆதிக்கத்தனையை அறுத்தெறிந்தார் பல்கலைப் புலவர். கா.சு.பிள்ளை எனில் - அவர்தம் தமிழர் சமயக் கொள்கை தந்த விழிப்புணர்வு மங்கலாமோ?
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/105
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
