இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தனித்தமிழர் மரபு போற்றிய நாவலர் பாரதியார் தமிழின் வழிவந்த தனிக் கொள்கைகளையும், தமிழர் நாகரிக உயர்வினையும் பல்வேறு சான்றுகனை ஆராய்ந்து எடுத்துக் கூறி நிலைநிறுத்திய தனிப் பெருமை பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கட்கு உரியதாகும். கல்லூரியில் மை றைமலை அடிகளாரின் மாணவராகப் பயின்று, தொழிலில் வழக்கறிஞராக வளர்ந்து, ஆர்வத்தால் தமிழ் அறிஞராய்ச் சிறந்து, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்