பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தமிழ்க்கடல் அலை ஓசை தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்து, எப்பொருளையும் நுண்ணி தின் ஆசாயும் திறனுடையராய் உயர்ந்து, எவ்வெவர் தம் கொள்கை மாறுபடக் காணினும் கடா விடைகளான் அவற் றைத் தகர்த்து, உண்மை ஒளியினால் தமிழர்தம் மயக்கறுத்துத் தமது கோட்பாடு நிறுவும் வீறுடன் விளங்கினார் அவர். அக்காலத்தில் எத்துறை நோக்கினும், அத்துறை ஒவ் வொன்றிலும் தமிழ்மொழியினும் வடமொழியே முன் வைக்கப் பட்டுத் தமிழ்ச் செல்வமெல்லாம் வடமொழியினின்றும் பெயர்க் கப்பட்ட கடன் பொருளே என்னும் கருத்து வலிபெற்றுத் தனிப் பெரும் புகழுடைய தமிழ்ப் புலவரெல்லாம் ஆரியக் கால் வழியினரே என்னும் கட்டுக் கதைகள் பரவி நின்று, தமிழுடன் பிறவாததோர் இழுக்குத் தமிழ்மீது ஏற்றப்பட்டிருந்தது. தமிழகத்துப் புலவர்கள் பலரும் இதனை உணர மாட்டா தவராய் இந்தப் பொய்மைக்குத் தலை வணங்கி வாய்பொத்திக் கைகூப்பி நின்றதனைக் கண்டு மனம் பொறாது அந்தக் கட்டுக் கதைகளைச் சுட்டிக் காட்டி விட்டெறியுமாறு முழங்கியவர் நாவலர் பாரதியார். தமிழ் மறை கண்ட வள்ளுவனையும் அவன் புகழ் பொறாது ஆரிய மறையோனுக்கு மகனாக்கத் தாழ்குலப் பெண்ணே தாயெனக் கற்பித்த மடமையையும், தமிழ் மாட்சி உணர்த்தும் தொல்காப்பியனை ஆரியப் பார்ப்பனனாக்கியதோடமையாமல், அவரை, இல்லா அகத்தியருக்குப் பொல்லா மாணாக்கராக்கிய புனை சுருட்டையும் பொடிபடச் செய்தவர் பாரதியார். சேரர் தாய முறை இதுவெனக் கண்டுணர்த்தி, சிலப்பதி காரம் வழங்கிய இளங்கோ அடிகளும் மணிமேகலை அளித்த மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் ஒரு காலத் தவரல்லர் என்பதைத் தெளிவுறுத்தி, தமிழர் வாழ்வின் அகமும் புறமும் இதுவென விளக்கிக் கூறி, தமிழ்இலக்கணங் கூறும் 'உயர்திணை', ஒழுக்கத்தின் வழியதே அன்றிப் பிறப்பின் வழிய தன்று என்பதை நிலைநிறுத்திப் பலப்பல உண்மை விளக்கம் கண்டவர் பாரதியார்.