18 தமிழ்க்கடல் அலை ஓசை அத்தகைய தொன்னூல் ஆசிரியனைக் குறித்து எழுந்த கற்பனையையும் அதன் விளைவையும், தொல்காப்பியன் குறித்து ஆராய்ந்து எழுதுமிடத்துப் பாரதியார் இவ்வாறு சுட்டுகிறார்: பழங்காவியக் குடியினனான திரண தூமாக்கினி எனும் பார்ப்பனன் இந்நூல் இயற்றினன் எனும் கட்டுக்கதை வட நூலிலும் ஆதார மற்றதும் அறிவால் மறுக்கப் படுவதுமான பொய்க்கதை. இவ்வம்புக் கதை வள்ளுவனுள்ளிட்டு நல்ல தமிழ்ப் புலவர் எல்லாரும் ஆரியரெனக் கூறித் தமிழரைப் பழிக்கும் பார்ப்பன மாக்களின் குறும்பின் விளைவாகும்.' " தொல்காப்பியன் முதலான பெரும் புலவர் மட்டுமே அன்றி, தமிழ்க் கடவுளரும் வரலாறு திரிந்து புதுவடிவம் பெறு தற்கு ஆரி ரியப் புராணக் கலவை காரணமாகும் என்று கண்ட பாரதியார், 'முருகன்' நிலை குறித்து இரங்கிக் கூறுவது இது: "தனிமுதற் கடவுளான தமிழ் முருகனை, ஆரிய தேவ குமாரனாக்கிச் சுப்பிரமணியன் என்று தீட்சா நாமகரணச் சடங்கும் செய்து, தேவ சேனாதிபதிப் பதவியும், தெய்வயானைத் திருமணமும் தந்தபின், குறவள்ளி பால் அறம் திறம்பாக் கடவுட் காதலுடையானைக் கருகாம லோலன் ஆக்கிப் புதிய பெருந்திணைக் கோவைகளும், காமத்து மிகுதிற உலாக்கள், சிந்து கீர்த்தனைகளும், திருப்புகழ் முதலியனவும் பெருகின." இவ்வாறு கடவுளின் மணவாழ்வே களங்கத்திற்கும் காமத் திற்கும் இரையாக்கப்பட்டது எனில், மக்களின் மண நிகழ்ச்சி மட்டும் தப்புமோ? கண்ணகி திருமணங் குறித்த ஆராய்ச்சியில், திருமண முறைபற்றி அவர் குறிப்பது இது: கரண (சடங்கு) வகை இதுவெனத் தமிழ் நூல் எதுவும் வரையறுத்திலது. காலந்தோறும் கொள்கைகள் மாறும். அவ் வழிக் கரணமும் பல திறப்படலாம். எனினும் தொன்று முதற் சான்றோர் நன்றெனக் கொண்ட, முளைப் பாலிகையும், மங்கல மடவார் மலரொடு வாழ்த்தும் மாலை மாற்றும் எங்கும் என்றும் தமிழர் திருமணங்களில் நின்று பயிலும். அம்மி மிதித்தலும், ஏழடி நடத்தலும் மறையோர் மன்றலுக்கே இன்றியமை யாதனர்?.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/109
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
