தனித்தமிழர் மரபு போற்றிய நாவலர் பாரதியார் 89 இவ்வாறு ஆரியத் தொடர்பு மிகுதியால் ஏற்பட்ட விளைவை நாவலர் பாரதியார் விளக்கி உரைப்பது காண்க : 'சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேறிய புதிய ஆரியக் களியால் தமிழர் தமிழையும் மறந்து முன்னோர் பெருமையும் உரனும் துறந்து பிறர் நகைப்புக்கு ஆளாயினர். உலகமெல் லாம் நெட்டிருள் நீங்கி வெட்டென விடிந்து அறிவொளியேறும் இக்காலத் தமிழ் இளைஞரும் நாட்காலை தூய காற்றைச் சால மோப்பாராயினர். களித்த ஆரியம் புளித்த பின், அதில் அரு வருப்பும் தமது பழந்தமிழ்த் தூய வாழ்வினை மீள மேற்கொள்ளும் பெருவிருப்பும் ஒருங்குணர்வாராயினர். இப் புதிய நன்முயற் சிக்குப் பழைய நூல்களே துணையாமாதலின் முன் மறந்து துறந்த செய்யுட்களைத் தேடத் தொடங்கினர். துருவிக் கண்டு உருவும் செல்லரித்த சுவடிகளைத் துடைத்துப் புதுக்கித் தம் முன்னேற்றக் கருவியாகக் கருதுவர். tr செந்தமிழில் வடசொல் கலத்தல் குறித்து நாவலர் பாரதியார் எழுதுமிடத்து வரன் முறை கடந்த ஆரியக் கலப்பை விளக்கியுள்ளார். "அப் பழங்காலச் சிறப்பொளி மிளிரும் தனித்தமிழ் மண உள். பின்னர்ப் பன்னாளும் மலர் நனிகமழ் இலக்கியம் பல தன்னொடு பழகிய ஆரியர், யவனர், சோனகர்போல் பலர் பிற மொழி உறவினை விளக்குங் குறிகளும் தமிழில் செறியக் காணு வோம். தமிழரொடு பழகிய பிறமொழியாளருள் நெடுந் தொடர்பு உடையவர் வடபுல ஆரியர். மதம், கலை, அறிவியல் வாழ்க்கைத் துறைகளில் நாளுங் கலந்து இருவரும் உறவுகொள நேர்ந்ததால், ஆரியச்சொற்கள் அவசியம் இன்றியும் அளவிறந்து தமிழில் செய்யுள், வழக்கு எனும் இரண்டிலும் விரவிப் பெருகலாயின. துவக்கத்தில் வந்த வடசொல், தமிழின் எழுத்தியலுக்கு ஏற்ப உருவம் மாறியும், மொழிமரபு தழுவியும், மருவியும், திரிந்தும் அருகி ஆங்காங்கே அறிஞரால் மட்டும் ஆளப்பட்டன. பிறகு ஆரியர் (வடமொழி வல்லார்) தமிழில் கவிகள் புனையவும் வடநூற் கதைகளை மொழி
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/110
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
