90 தமிழ்க்கடல் அலை ஓசை பெயர்த்துதவவும் முயன்றனர். அதனால் நாளடைவில் எண் ணிறந்த வடசொற்கள் தமிழொடு கலந்தன. எனினும் நெடுங் காலம் தமிழில் இலக்கண அமைதியும் மரபும் மாறாதிருந்தன. காலம் கழியக் கழிய வடநூல் வல்ல பார்ப்பனரோடு சமணரும் தத்தமக்கினிய வடசொற் றொடரையும் தமக்கு எளிய அம் மொழி நூல் முடிபையும், மரபு கடந்து தமிழில் முடைந்து மகிழ்வாரா யினர். தமிழ் மரபுணர்ந்து பேணாத வடநூல் வல்ல உரைகார ராலும் (தமிழ் இலக்கண இலக்கியங்கட்கு உரை எழுதியவர் களுட் சிலர்] இத்தகவிலா வழக்குப் பெருகி, தமிழ் ஒரு தனி மொழி ஆகாது என இகழும் பிரயோக விவேகம், இலக்கணக் கொத்துப்போற் சில நூல்களும் எழுந்தன. . அன்றியும் தராதரமின்றித் தத்தம் சமய, புராணக் கதை களைத் தமிழ்ப் பழம் பாட்டொடும் உராயப் பரப்பியும், இராம கதைகளைக் குருகுலச் சாதிகளோடு புகுத்துப் பெருக்கியும் கவிகள், காவியங்கள் புனையப் பெற்றன. கம்பர் இன்கவிக் கருவூலத்தோடு, தலபுராணப் பெருங் குப்பையும் குவியலாயின. அருந்தமிழ்க் கூத்தும், பொருநர் (நடிகர்) கலையும் மறைய லாயின. பண்ணும் பாட்டும் எண்ணுவாரின்றி இகழப்பெற்றன. இயல், இசை, நாடகத் தமிழில் முதலது மாறியும், மற்றவை இரண்டும் மறக்கப் பெற்றும், பெயரளவல்லால் பழைய வழக் கிழந்து மாறவும் காண்கிறோம். இன்னும் உலக வாழ்வினில் உவர்ப்பை ஊட்டி, வினைப்படும் முயற்சியில் வெறுப்பை விளைத்து மகிழ்வையே இகழும் தகவிலாக் கவிதைகள் தழைக்கலாயின. இவ்வாறு ஆரியக் கலப்பால் தமிழ்மொழி வளத்திலும், தமிழர் வாழ்விலும் விளைந்த குறையையும், குற்றத்தையும் விளக்கிய நாவலர் பாரதியார், தமிழ் இலக்கியத்தின் - செய் யுளின் - சிறப்பையும், வடமொழி இலக்கியப் பரப்பின் தரத்தை யும் விளக்கக் கூறியது இது: - , - "தமிழ்ச் சங்கப் பழம் பாடல்கள் அல்லது நூற்றொகுதிகள் யாவும் அகம், புறம் என்னும் இரு பெரும்பிரிவில் அமைந் 'அகம்' என்பது காதல் உள்ளப் பாங்கினையும், அதன் பிற சார்புகளையும் வெளிப்படுத்தி யமையும் செய்யுட்களை முறை தவை.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
