பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தமிழர் மரபு போற்றிய நாவலர் பாரதியார் 您 யால் வரைந்து காட்டுகிறது. அது போன்று, 'புறம்' என்பது இல்லின் புறத்தனவாகும், மக்கள் ஊதியங்கள் எல்லாவற் றையும் பற்றிய பாடல்களின் முழு எல்லையைப் பற்றி யதேயாம். சமக்கிரத இலக்கியப் பரப்புள், செய்யுட்கள் யாவும்,தர்ம, அர்த்த, காம, மோட்சங்களாய நான்கு புருடார்த்தங்களுள் ஒன்றையோ, சிலவற்றையோ விரித்துரைப்பன ஆகும். இவ் விதிதான் சமக்கிரதச் செய்யுள் இலக்கியங்களின் எல்லாப் பகுப்புகளுக்குள்ளும் நன்கு வற்புறுத்தப் பெற்றும், கையாளப் பெற்றும் உள்ளது. முறையானே எச் செய்யுளும் புருடார்த்தப் பகுப்பில் ஒன்றுள் அல்லது சிலவற்றுள் அடக்கப் பெறலாம். இவ்வாறே பழந்தமிழ்ச் சங்கப் பாட்டுகளும் இந்நூல் பகுப்புட் பட்டுப் பொருந்தித் தோன்றுமாறு வகைப்படுத்தப்படலாம். ஆனால், மக்கள் ஊதியங்கள் எல்லாவற்றையும், ஒருவன் அக வாழ்க்கை அல்லது தனிநல வாழ்க்கை, புறவாழ்க்கை அல்லது பொதுநல வாழ்க்கை என்னும் இரு பகுப்புட் படுத்தும் தமிழர் வழக்கே பெரிதும் இயற்கையதாகவும் அறிவிற்கும் பொருத்த மானதாகவும் தோன்றுகின்றது. சமக்கிரத நாற்பிரிவுகள் அளவை நெறியாற் சிறிது குறைபாடுடையனவாகத் தோன்றும். எழுத்துக் கல்வி அல்லது கலையறிவு தன்னியல்பில் இந் நான் கனுள் முற்றும் முறையே அடங்கா ததாகவும், அர்த்தம் அல்லது காமத்தை யொக்க இத்துணை கருதற்குரித்தாகவும், முதன்மைத் தாகவும் கொள்ளப் பெறவில்லை. இதற்கு மாருக, இந்தச் சமக் கிரதப் பிரிவுகள் (நான்கும்] தமிழிலக்கண ஆசிரியர்கள் உயர்த் துரைக்கும் இரு பெரும் [அகம் - புறம்) பிரிவுகளுள் மாறு பாடின்றி எளிதில் அடங்கும். இதுவே தமிழர், சமக்கிரதக் காரர் இவர்கள் தம் இலக்கியங்களுள் தாம் தாம் கொள்ளும் பழமையான முதல் வேறுபாடாகத் தோன்றுகிறது." இவ்வாறு தமிழர் தம் பரந்து விரிந்த தமிழ்ச் செய்யுட் கடல், குறிக்கோள் அடிப்படையில் பாகு படுத்தப்பட்ட முறை யும், வடமொழி இலக்கியப் பரப்பு குறிக்கோள்வழி பாகுபடுத்தப் பட்ட முறையும் அடிப்படை வேற்றுமை உடையதாவதை அவர் தெளிவு படுத்தினார்.