82 தமிழ்க்கடல் அலை ஓசை மேலும், 'இலக்கியம்' என்னுந் தமிழ்ச் சொல்லே 'லட்சியம்' என்னும் வடசொல்லின் திரிபு என்றொரு கருத்தும், அதனால் தமிழ் இலக்கியச் சிறப்புடைய மொழி ஆகாது என்றோர் எண்ணமும், தமிழில் உள்ள செய்யுட்கள் எல்லாம் தனித்தனிப் பாட்டுகள் என்னும் அளவிலேயே ஏற்கப் படுவதற்குரியன என்னும் மயக்கமும் பலரிடையே நிலவிற்று அந்நாள். அது குறித்து நாவலர் பாரதியார் நவின்றதனைக் காண்க: "இடைக்காலத்தில் தமிழர்கள் தன்மதிப்பிழந்து பெயர்கள் முதலாயின பிறமொழியில் இருந்தால்தான் பெருமை என .எண்ணி, மக்கள்பெயர் முதல் மரப்பெயர் ஈறாக உள்ள எல்லாப் பெயர்கட்கும் வடமொழிப் பெயர்களையே இட்டு வழங்க லாயினர். இலக்கியம் என்பது 'லட்சியம்' என்ற வட சொல்லின் திரிபு என்பர். தமிழில் 'கங்காரு' என்ற சொல் வந்து வழங்குவதுபோல் இரவல் கொண்டதென்பர். இலக்கியத்தைச் செய்யுள் என்பர் பண்டைத் தமிழர், ஆங்கி லேயர் லிட்டெரச்சர் என ஆங்கிலத்தில் சொல்வர். எழுதப் பட்ட எல்லாவற்றையும் அது குறிக்கும். பாட்டு, உரை எவை யாயினும் ஒரு பொருள் பற்றி விரித்தெழுதும் அனைத்தையும் தமிழில் செய்யுள் என்பர். வடமொழியில் லட்சியம் என்ற சொற் பொருள் நோக்கின் செய்யுளின் பொருளோடு வேறுபடும். 'லட்சியம்' என்பதற்கு நோக்கம் என்ற பொருளைக் கொண்டு ஒரு நோக்கத்தோடு எழுதப்படுவதே இலக்கியம். அஃதும் புருடார்த்தம் நான்கைக் கருதிச் செய்யப் படுவதேயாக இருக்கும். 'மக்கள் உணர்ச்சியினை வெளிப்படுத்துவன வெல் லாம் இலக்கிய மல்ல' என்பர் வடவர். இப்பொருள் பொருந் தாது என்னை? புருடார்த்தம் நான்கை மட்டும் லட்சியமாகக் கொண்டு ஏனையவற்றை லட்சியமாகக் கொள்ளாதிருத்தல் சிறப்பன்று. தவிர ஏதாவது ஒரு கருத்தை நிலைநாட்டச் செய்வது இலக்கியமாகாது.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/113
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
