இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தளித்தமிழர் மரபு போற்றிய நாவலர் பாரதியார் 93 தமிழர்கள் இலக்கியம் என்பதைக் குறுகிய நோக்கின்றிப் பரந்த நோக்குடன் " 'செய்யுள்' என வழங்கினர். செய்யுளாவது யாது? விழுமிய கருத்துகளை அவர் காலத்தில் சொல்லக் கேட்டவற்றோடு ஒழியாமல், பிற்காலத்தார்க்கும் பயன்படுமாறு எந்த உருவத்தில் (உரை-பாட்டு) செய்யப் படினும் அது செய்யுள். இவ்வாறு விளக்கிய நாவலர் பாரதியார், தமிழர்கள் கண்ட சங்கச் செய்யுளும் பிறவுமே உயர்ந்த இலக்கியமா தலையும், தமிழ் இலக்கிய மாட்சியுடைய மொழியா தலையும் புலப்படுத்தி வட மொழிக்குத் தெண்டனிட்டுக் கிடந்த தமிழ் உள்ளத்தை மயக்கம் நீங்கித் தெளிவடையச் செய்தார். புத்துணர்ச்சி பெற்ற தமிழ் உள்ளம் வடமொழிக் கற்பனைக்கு அடிமைப்படுமோ? கற்பிக்கப்பட்ட அடிமைத்தனத்தி லிருந்து தமிழ்ப்புலவோர் விடுதலை உணர்வுபெற வழிகண்ட நாவலர் பாரதியாரை நாடு மறத்தலுங் கூடுமோ?