இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சங்க இலக்கியங்களைச் சாகாது வழங்கிய டாக்டர் உ. வே. சா. கடந்த நூற்றாண்டில், பழந்தமிழ் ஏடுகள் பலவும் அச்சா காத நிலையில், தமிழ் கற்கப் புகுவார் எத்தகைய ஏடுகளை மட் டுமே பயின்றார்கள் என்பதை அறிந்தால் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த சூழல் புலப்படும். டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் வாழ்க்கை வர லாற்றிலிருந்து இது விளங்கும். அவர், குடந்தையில் தமிழா சிரியர் பணி பூண்ட தொடக்க நாட்களில் அங்குத் தமிழ்ப்பற்று மிக்க சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் நீதிபதியாகத்