சங்க இலக்கியங்களைச்... டாக்டர் உ. வே. சா. 95 திகழ்ந்தார். முதன் முதலாக நீதிபதியைக் காணச் சென்ற போது அவர் கேட்டதற்கிணங்கத் தாம் கற்ற இலக்கியங்களின் பட்டியலை ஐயர் விளக்கினார். து "குடந்தை அந்தாதி, மறைசை அந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத் தந்தாதி, அழகரந்தாதி, கம்பரந்தாதி, முல்லையந் தாதி, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை, எனத் தொடர்ந்து அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத் தமிழில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள் பல என ஐயர் கூறினார். ມ அதைக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி, 'இதெல்லாம் படித்து என்ன பயன்? என்று வினவ ஐயர் மேலும் தொடர்ந்து, திருவிளையாடற் புராணம், மயூரப் புராணம், குற்றாலம் புராணம் முதலான புராண வரிசையை முடித்து, நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம், சிவஞான சித்தியார் உரை முதலானவற்றோடு, கம்ப இராமாயணத்தை ஒரு முறைக்கு இரு முறை படித்திருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் பட்டியலைக் கேட்டும் நீதிபதி மகிழாமல் ஐயரைப் பார்த்து, 'சீவக சிந்தாமணி படித்திருக்கிறீர்களா? மணிமேகலை படித்திருக்கிறீர்களா? சிலப்பதிகாரம் படித்திருக்கிறீர்களா? என்று கேட்க, ஐயரோ, 'புத்தகம் கிடைக்கவில்லை, கிடைத்தால் அவற்றையும் படிக்கத் துணிவுண்டு' என்று பதிலளித்தார். அவரது உள்ளத்திலோ ‘என் ஆசிரியரே படித்ததில்லை; நானும் படித்ததில்லை. இத்தகைய புத்தகங்களைக் கூட நான் கண்ணால் பார்த்ததில்லையே' என்னும் நினைவு அப்பொழுதுதான் பிறந்தது. என்று தோன்றுகிறது. "பிரபந்தங்கள் இயற்றுவதிலே புகழ் பெற்ற மகாவித்து வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடமும் வேறு பல தக்க தமிழ்ப் பெருமக்களிடமும் பாடங் கேட்டவரும் தமிழ் கற்கும் ஆர்வம் மிக்கவரும் ஒரு கல்லூரி ஆசிரியருமாக விளங்கிய ஐயரவர்களே கற்கக் கூடியதாக வாய்த்திருந்த ஏடுகள் எவை
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
