96 தமிழ்க்கடல் அலை ஓசை எவை என்பதிலிருந்து அக் காலத்தில் (கி.பி. 1880) தமிழ் இலக்கியம் பரவியிருந்த நிலை தெளிவாகின்ற தன்றோ? அந்த உரையாடலைத் தொடர்ந்து சேலம் இராமசாமி முதலியார் ஐயரவர்களிடம் சிந்தாமணித் தாள் ஏடு ஒன்றை அளித்ததோடு, 'சிந்தாமணி மிகச் சிறந்த நூல். கம்ப இராமா வணத்தின் கவிதை நெறிக் கெல்லாம் இந்தக் காவியமே வழி காட்டி. இதைப் படித்துப் பொருள் கண்டு விளக்கினால் உங் களுக்கும் நன்மை, எனக்கும் இன்பம் பயக்கும்' என்று தெரி வித்தார். அது முதலாகவே சிந்தாமணியைப் படித்தலில் அரும்பிய விருப்பம், பொருள் காணும் முயற்சியாக மலர்ந்து, பல படிகளை ஒப்பு நோக்கிச் சரியான பாடம் காண்பதாகக் காய்த்து, புதிய அச்சுப்பதிப்பாகக் கனிந்தது என்று தெரிகிறது. சேலம் இராமசாமி முதலியாரிடத்தே ஐயருக்குத் தொடர்பு ஏற்படா திருக்குமாயின், அக் காலத்தில் பழந்தமிழ் இலக்கியங் களின் அருமை அவருக்கு விளங்கி யிருக்க வேறு ஏதுவில்லை என்று ஐயருடைய எழுத்தால் தெரிய வருகிறது. அவருடைய நட்பினால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு புதுத் துறை தோன் றியது. தமிழ் இலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது. அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், உலா, கோவை முதலிய பிரபந்தங்களிலும், புராணங்களிலும் தமிழின் இன்பங் கண்டு மகிழ்வதோடு நில்லாமல், பழமையும் பெருமதிப்புமுடைய தண் டமிழ் நூல்களில் பொதிந்து கிடக்கும் இன்றமிழ் இயற்கை இன்பத்தை மாந்தி, நான் மகிழ்வதோடு பிறரும் அறிந்து இன் புறச் செய்யும் பேறு எனக்கு வாய்த்தது" என ஐயரவர்கள் நன்றியோடு மகிழ்ந்து கூறியுள்ளார். அக் காலத்தில் வழங்கிய ஏடுகளின் படி கிடைப்பதும் அரி தாக இருந்ததால் ஐயர் பட்ட துன்பங்கள் பல. திருக்குறள் உரையுடன் கூடிய நூல் ஒருவரிடம் இருப்பதை அறிந்து அதைப் பெறுவதற்குப் பல மைல் நடந்திருக்கிறார். இராமாயணம் ஏழு காண்டங்களும் மாயூரத்தில் ஒரு கடையில் இருந்ததைக் கண்டு, உடனே அதன் விலைக்காகும் தொகையைப் பெற்றுவரத் திரு வாவடுதுறை வரை சென்று திரும்பியிருக்கிறார்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/117
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
