08 தமிழ்க்கடல் அலை ஓசை எவ்வள வு அருமையான சுவடிகள் இந்த உலகத்திலிருந்து மறைந்தன" என்றும், “அது முதல் என் உள்ளத்தில் அமைதி யில்லாமற் போயிற்று. இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!' என்றும் எழுதியுள்ளார் ஐயர். மற்றோர் இடத்திற்குச் சுவடி தேடிச் சென்றபோது ஏக்க முற்று அவருக்குக் கிடைத்த பதில் இது: பயன் "எங்கள் வீட்டில், ஊர்க்காட்டு வாத்தியார் சுவடிகள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து போய்விட்டன. பயனின்றி இடத்தை அடைத்துக் கொண் டிருந்த அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்க்கவும் எனக்குத் திறமை இல்லை. அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இக்காலத் தில் இவற்றைச் சுமந்துகொண்டிருப்பது என்ன என்றெண்ணினேன். ஆற்றிலே போட்டு விடலாமென்றும் ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போல் கட்டி ஆற்றிலே விடுவது முறையென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அவ்வாறே ஓர் ஆடிப் பதினெட்டாந் தேதி அவற்றை வாய்க்காலில் விட்டு விட்டேன்". இதைக் கேட்டுத் "தமிழின் பெருமையைச் சொல்லிய சிலர், அது நெருப்பிலே எரியாது நின்றதென்றும், நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டியிருக்கிறார்கள். அதே தமிழ் இன்று நெருப்பில் எரித்தும், நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய்விட்டார்கள். பார்த்து இரங்குதற்கு நாம் இருக்கிறோம்" எனக் கண்ணீர் விடுகிறார் ஐயர். மற்றொரு கவிராயரிடத்தே சென்றபோது அவர் 'சிலப்பதி காரம் என்று சொல்லக் கூடாது; சிறப்பதிகாரம் என்றுதான் கூறவேண்டும்' என்று உரைத்ததோடு, அதைக் காட்டுமாறு கேட்டபோது 'அவ்வளவு சுலபமாகக் காட்ட முடியுமா? இப்போ தெல்லாம் அவற்றைத் தொடலாமோ! சரசுவதி பூசையில்தான் அர்ச்சனை பண்ணிப் பூசை செய்து எடுக்க வேண்டும்' என்றும் கூறினாராம். இவ்வாறு பூசா மனோபாவம் வளர்ந்து, அறிவுக்குத் தடை விதித்து அர்ச்சனை என்னும் பெயரால் சுவடி களை அரித்து வந்ததை இது காட்டும். ม
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/119
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
