பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களைச்.. டாக்டர் உ.வே.சா. 98 மற்றோரிடத்தில், 'ஏட்டுச் சுவடிகளின் (ஓலை தொடுக்கும்) கயிறுகளை எல்லாம் உருவி எடுத்துக்கொண்டு ஒரு கயிற்றில் பல சுவடிகளைக் கட்டியிருந்தார்கள். சுவடிகளைக் காட்டிலும் கயிறுதான் அவர்களுக்குப் பெரிதாகப்பட்டது. கணக்குச் சுருளைகளும் கம்ப இராமாயண ஏடுகளும் கலந்திருந்தன' என்று ஐயர் கூறுகிறார். இவ்வாறு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த பழந் தமிழ் ஏடுகளைப் பதிப்பித்து வெளியிடும் விருப்பம் கொண்ட ஐயரவர்கள், மேற்கொண்ட உழைப்பு சிறிதன்று. ஏடு தேடும் முயற்சியில் நாடெங்கும் உள்ள கவிராயர் வீடெல்லாம் ஏறி இறங்க வேண்டும். ஏ வேண்டிய ஏடு கண்ட போது அதை உரியவரிடமிருந்து பெறுவதும் எளிதாக இராது. ஒரு நூலைப் பதிப்பிக்குமுன் கிடைத்த சுவடியை வேறு பல சுவடி களோடு ஒப்பு நோக்கிக் காண வேண்டும். அவ்வாறு நெடிய பலப் பல இரவுகள் கண் விழித்திடவும் வேண்டும். ஒப்பு நோக்குமிடத்துப் பாட வேற்றுமை தோன்றின், சரியான பாடத்தைத் தெளிய, உரையும் தெளிய வேண்டும். பழைய உரையுள்ள ஏடெனில் உரையில் ஆளப்பட்டுள்ள எடுத்துக் காட்டுகளை உரிய நூலும் இடமும் காட்டிக் குறிக்க வேண்டும். இவ்வாறு ஒப்பு நோக்கி ஆராய்ந்து மூல பாடம் இதுவெனவும், முறையான உரை இதுவெனவும் முடிவு கட்டிப் பாட வேறுபாடும் குறிப்புந் தந்து அச்சியற்ற முற்படும்போது, அச்சுப்பிழை மலியா தவாறு பரிசீலித்த வண்ணம் இருக்க வேண்டும். அச்சு இயற்றியவுடன் விலைக்கு வாங்கத் தக்காரிடத்தே முன்னமே ஒப்பமும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு பணியும் இடையூறின்றியே நிறைவேறிடுமா? வரும் இடையூறுகளைத் தாங்கிக் கொள்ளும் உரமும் வேண்டும். இவ்வாறு ஒரு நூலை முற்ற முடித்து வெளியிடுதல் அரிய செயலன்றே! ஐயரவர்கள் முதன் முதல் பதிப்பித்த இலக்கியம் சீவக சிந்தாமணி. அதைப் பதிப்பிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியின் அருமை அவர் எழுதிய இக் குறிப்பால் உணரலாம். "பலவகையில் முயன்று தேடியதில் சிந்தாமணி ஏடுகள் இரு பத்து மூன்று கிடைத்தன. அவற்றைப் பார்க்கப் பார்க்கப் பல