பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ்க்கடல் அலை ஓசை உண்மைகள் புலப்பட்டன. காணவே முடியவில்லை. பாட பேதக் கடலுக்குக் கரை 'சுவடிகள் எழுதப் பட்டுள்ள முறையில் இது கொம்பு, இது சுழி என்று பிரித்து அறிய முடியாது. மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே இராது. 'ர' கரத்திற்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகத் தோற்றும். சாபம், சரபமாகத் தோற்றும். ஓரிடத்தில் 'சரடு' என்று வந்ததை 'சாடு' என்றே பலகாலம் எண்ணியிருந்தேன். 'தான்' என்பதைத் 'தான்' என்று நினைத்தேன். 'யானை நாகத்திற் றோற்றுதலின் என்று பல ஏடுகளில் காணப்பட்ட ஒருவரி, 'யானை நாதத்தில் தோற்றுதலின்' என்றிருக்க வேண்டு மென்பதை ஒரு படியால் தெளிந்தேன். இடையின 'ர' கரத்துக்கும் வல்லின 'ற' கரத் துக்கும் பேதந் தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல. உரை இது, மூலம் இது, மேற்கோள் இதுவென்று தெரியாமல் முட்டுப் பட்ட இடங்கள் பல ! "இவ்வாறு தடுமாறித் தடுமாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் தோன்றவில்லை. மயங்கித்தவித்து நின்ற பிறகு உண்மை விளங்கும்போது பின்னும் பன்மடங்கு ஊக்கம் ஏற்படும்!" டனர். இவ்வாறு ஏடு பதிப்பிப்பது குறித்து ஐயரே விளக்கி யுள்ளார். சிந்தாமணியை அவர் பதிப்பிக்க முயன்று கொண் டிருந்த காலை, அறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் அம் முயற்சியில் ஆர்வமுடையராய், ஐயரைக் கண்டு தம் விருப் பத்தைத் தெரிவித்துத் தம்மிடத்தே அப் பணியை விடக் கேட் ஐயரவர்களோ தாம் மேற்கொண்டு தாம் மேற்கொண்டு செய்திருந்த ஆராய்ச்சி முதலானவை வெளிப்படுவதற்கு அதுவே வாய்ப்பு என்று கருதியமையினால், அதற்கு இசைய மறுத்து விட்டார். எனினும் அப் பெரியார்களிடையே தோன்றிய நட்பும் மதிப்பும் குன்றாது வளர்ந்திட அவ்விருவரும் மேலும் பல நல்ல நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஒருவருக் கொருவர் உறு துணையாகவே வாழ்ந்தனர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் கி.பி.1855 இல் தஞ்சை மாவட்டம் உத்தமதானபுரத்தில் பிறந்தவர். சிறு