சங்க இலக்கியங்களைச்...டாக்டர் உ. வே. சா. 101 வயதில் திண்ணைப் பள்ளியில் ஏடும் எழுத்தாணியுங் கொண்டு பயின்றவர். தந்தையார் இசைப் பயிற்சி உடையவராதலின், அவருக்கும் தமிழ்ப் பாட்டுகளை இசையுடன் பாடும் பயிற்சி ஏற் பட்டது. இசையில் ஏற்பட்ட ஆர்வத்தினும் தமிழிலேயே அவரது ஆர்வம் மிகுந்தது. அவரது பதினேழாம் வயது வரை தமிழ்ப் புலவர் பலரிடம் பயின்று, பின்னர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை அடைந்து பல நூல்களைப் பாடங் கேட்டார். அவ்வாறு கற்குங் காலத்து, ஆசிரியர் பல பாடல்களைப் புதியனவாக இயற்றிக் கூற அவற்றை அவ்வாறே ஓலைகளில் பிழையின்றி எழுதி வந்துள்ளார். மகாவித்துவான் மறைந்த பின்னர், திருவாவடுதுறை மடத்துத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகர் அவர்களிடமும் பல நூல்களைக் கற்றுத் தெளிந்தார். அக் காலத்தில் குடந்தைக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராக விளங்கிய தியாகராயச் செட்டியார் அந்தப் பணியினின்றும் விலகிக் கொண்டபோது, அவர் உதவியால் கி.பி. 1880இல் ஐயர் அப் பதவியில் அமர்ந்தார். அதனால் அவரது பேரும் புகழும் சிறக்கலாயின. அவ்வாறு கல்லூரி ஆசிரியராக இருந்த காலத்திலேயே, சிந்தாமணி பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கி. பி. 1887இல் அந்நூலை நச்சினார்க்கினியரது உரையோடும் வெளியிட்டுப் பல ருடைய பாராட்டுரைகளையும் பெற்றார்கள். ஐயர், 'சமண சமயத் தினர் அல்லாதவர்' என்ற கண்கொண்டு, அந்நூல் பதிப்புக் குறையுடைய தாகவே இருக்கும் என எண்ணிக் கண்டனம் செய்தவரும் நாளடைவில் அதன் சிறப்பை உணரலாயினர். இந்த நூலை வெளியிட்டதினால் கிடைத்த பாராட்டும் புகழும் ஊக்குவித்ததனால், தொடர்ந்து சங்க இலக்கியங்களிலே தலையான நூலாக விளங்கும் பத்துப்பாட்டைப் பதிப்பிக்க முற்பட்டார். இரண்டே ஆண்டுகளில் பத்துப்பாட்டையும் நச்சினார்க்கினியர் உரையோடு அச்சிட்டு வழங்கினார். பத்துப்பாட்டு என்னும் நூல் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தது ஆதலின், அதன்மூல ஏடுகள் கிடைத்தும் உரையுள்ள ஏடுகளைத் தேடி அவர் பட்டபாடு பெரி தாகும்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/122
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
