102 தமிழ்க்கடல் அலை ஓசை அடுத்து, அவர் சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து, அடியார்க்கு நல்லார் உரையோடும், பழைய அரும்பத உரையோடும் பதிப்பித்தார். அதற்குச் சில ஆண்டுகள் முன்பே சோடசா வதானம் சுப்பராய செட்டியார், சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லார் உரையோடு பதிப்பித்திருந்தார். எனினும் ஐயர், தம் பதிப்பில் அரும்பத அகராதித் தொகுப்பும், அரிய செய்திகள் குறிப்பும், அரசர், புலவர், நாடு முதலான பெயர்களின் வரிசை யும், விளக்க மேற்கோள் அகராதியும், கதைச் சுருக்கமும், ஆசிரியர் இளங்கோவடிகள் வரலாறும் எழுதிச் சேர்க்கப் பட்டதால் இப்பதிப்பு நிறைவுடையதாயிற்று. இப் பதிப்பு வெளியான காலத்து, தமிழ்ப் புலவர்களுக்கு மகிழ்ச்சியை ஐயர் இவ்வாறு குறிக்கின்றார்: 16 ஏற்பட்ட "சீவக சிந்தாமணியும், பத்துப் பாட்டும் தமிழ் நாட்டில் உலாவத் தொடங்கிய பிறகு பழந்தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து இன்புறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டா யிற்று. அவற்றின் பின்பு சிவப்பதிகாரம் வெளிவரவே பண்டைத் தமிழ் நாட்டின் இயல்பும், தமிழில் இருந்த கலைப் பரப்பின் சிறப்பும் யாவர்க்கும் புலப்படலாயின. 'கண்டறியாதன கண்டோம்' என்று புலவர்களும் ஆராய்ச்சியாளர்களும் உவகைக் கடலில் மூழ்கினர்" ஒவ்வொரு நூலையும் பதிப்பித்த போதே பிற நூல்கள் பற்றி அவருக்குக் கிடைத்த குறிப்புகளையும் பிறவற்றையும் அவர் குறித்துக்கொண்டு வந்ததால், அடுத்து வேறு சுவடி களைப் பதிப்பிக்கும் முயற்சி அவருக்குக் கைவந்ததாயிற்று. அதன் பயனாக 1894ஆம் ஆண்டில் புறநானூற்றைப் பதிப்பித் தார். அடுத்த ஆண்டிலேயே புறப்பொருள் வெண்பாமாலை பழைய உரையுடன் அச்சேறியது. அடுத்த மூன்று ஆண்டு களில் 'மணிமேகலை' அதன் உரையோடும் புத்த சமயம் பற்றிய விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையோடும் வெளிவந்தது. பின்னர், பதிற்றுப்பத்து, பரிபாடல் முதலான சங்க நூல்களையும் பதிப்பித்து வழங்கினார். உதயணன் கதைச் சுருக்கம் மற்றும் பல உரைநடை நூல்களும் எழுதினார். அவர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல் பத்தொன்பதாம் நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
