சங்க இலக்கியங்களைச்.. டாக்டர் உ.வே.சா. 103 பிற்பகுதியில் இருந்த 'தமிழ்க் கல்வி நிலையைப்' படம் பிடித்துக் காட்டுவதாம். சாமிநாத ஐயர் அவர்கள் புலவராய், பண்டிதராய், பதிப் பாசிரியராய்ச் சிறந்த காலத்து 1906இல் 'மகாமகோபாத்தி யாயர்' என்னும் பட்டத்தை அரசினரிடம் பெற்றார். பின்னர், 'தாக்ஷிணாத்திய கலாநிதி' என்னும் சிறப்பையும், சென்னைப் பல்கலைக் கழகம் அவரது தமிழ்த்தொண்டைப் பாராட்டி வழங்கிய 'டாக்டர்' பட்டத்தையும் பெற்றுத் திகழ்ந்தார். சங்கத் தமிழ் இலக்கிய நன்மணம் பரவுவதற்கு ஐயரவர்கள் ஆற்றிய தொண்டினைப் பெரிதும் பாராட்டித் தமிழன்பு மிக்க மேல் நாட்டவரான ஜி.யு.போப் அவர்கள் கடிதம் வரைந் துள்ளார், வின்சோன் பேராசிரியர் ஜீலியன் என்னும் பிரெஞ்சு அறிஞரே சிந்தாமணிப் பதிப்பைப் பாராட்டி. பாரிசி லிருந்து மடல் எழுதியுள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த பல்துறை அறிஞர்களான மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார் முதலான பலர் அவரது பணியைப் பாராட்டியுள்ளனர். ஆம்! ஐயரவர்களின் திருப்பணியும் தாமோதரம் பிள்ளை அவர்களது திருத்தொண்டுமே மேன்மை மிகு சங்கத் தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்கச் செய்யக் காரணம் என்றால் தமிழறிந்த யார்தாம் அவர்களை மறக்கக் கூடும்! கேட்க "என்னுடைய வாழ்வின் நோக்கமெல்லாம் பெரும்பாலும் தமிழ்த் தொடர்புடையதுதான். தமிழ் நூல்களை ஆழ்ந்து பயில வேண்டும். கற்றவரிடத்து ஒழுங்காகப் பாடங் வேண்டும். கேட்டவற்றைச் சிந்தித்து முறையாகப் பாடஞ் சொல்ல வேண்டும். அதைவிடப் பெரிய உபகாரம் (தொண்டு) வேறில்லை' என்று அடக்கத்தோடு தமது குறிக்கோளைத் தெரிவித்துள்ள ஐயர் அவர்கள், அந்தக் குறிக்கோள்வழித் தொடர்ந்து பல பத்தாண்டுகள் அரும்பாடுபட்டு அயராது உழைத்து, தமிழ் காக்கும் திருப்பணியில் வெற்றி கண்டுள்ளார். எந்நாளும் உளவாகும் தமிழ் இலக்கியங்களோ அவர்தம் நினை வும் உளதாகும்! வாழ்க தமிழ் காக்கும் திருப்பணி!
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
