இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பழந்தமிழ் ஏடுகளைப் பதிப்பித்துத் தந்த தாமோதரனார் இவ் விருபதாம் நூற்றாண்டில் தமிழ் என்று சொன்னாலே, முப்பால் வழங்கும் குறளும், முத்தமிழ் முழங்கும் சிலம்பும், மூவாத் தமிழ் இலக்கணமாம் தொல்காப்பியமும், மண நூலாம் சிந்தாமணியும், சங்க இலக்கியச் செல்வங்களாம் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் கற்றவர் தம் சிந்தையைக் கவர்ந்து நிற்கும். அவர்தம் நெஞ்சம் தமிழின் தொன்மைக்கும், பெரு மைக்கும், அருமைக்கும், அழகுக்கும் சான்றாக நிலவும். அவற்றை எண்ணி எண்ணிப் பெருமிதத்தால் துள்ளும்.