பழந்தமிழ் ஏடுகளைப் பதிப்பித்துத்... தாமோதரனார் 10% சென்ற நூற்றாண்டிலோ எனில் இவை யாவும் ஒளி காணாத வைர மணிகளாய்ப் புதை பொருளாய்ப் புழுதி படிந்த ஏடு களாய் இருட்டறையில் மக்கிக் கொண்டிருந்தன. அக் காலப் புலவர்களும் கவிராயர்களுமே அவற்றின் அருமை உணராது அவற்றைத் தீண்டாமைக்கு ஆட்படுத்திப் புறக்கணித்து நின் றனர். அக் காலத்தில் சமய வழியிலேயே இலக்கியங்கள் போற்றப்படும் நிலை இருந்தமையின் கம்பரும், சேக்கிழாரும், வில்லியும், பரஞ்சோதியும், நம்மாழ்வாரும், நால்வரும், அருண கிரியும், ஆண்டாளும் அனைய புலவர்களே நினைவு கொள்ளப் பட்டனர். இவர் தம் இலக்கியங்களோடு, பிரபந்தங்களும் தல புராணங்களுமே கவிராயர்கள் கற்றுக் கைக் கொள்வளவாக நிலவின. கவிபாடுந் திறன் கைவரப் பெற்ற சீர்சால் புலவர் களும் சமய வழியிலேயே ஊன்றிய உள்ளத்தினராயினமையின் தத்தம் தெய்வங்கள் மீதே பிள்ளைத்தமிழ், உலா, கலம்பகம், அந்தாதி புராணம் ஆகிய சிற்றிலக்கியங்களை இயற்றி வந்தனர், ம் இந் நிலையில், பொன்னவிர் மேனியளாய்த் தமிழன்னை விளங்கிய காலத்துப் பிறந்த சங்கச் செய்யுட்கள் வழக்கற்றுப் போனதுடன் தமிழே பல்லாற்றானும் தாழ்நிலையுற்றிருந்தது. வழக்கிறவாது பலராலும் கற்கப்பட்ட சங்க நூல் ஒன்றிருக்கு மாயின் அது திருக்குறளேயாம். மற்றும் நாலடி முதலான சில அறநெறி ஏடுகளும் இலக்கண நூல்கள் சிலவுமே ஒரு சிலரால் கற்கப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரையில், தமிழ் எழுதுதற்கு உரிய கருவிகளா யிருந்தவை ஓலையும் எழுத்தாணியுமேயாம். எழுதுகோலும் (பென்சில்] [மைக்கட்டை) பழக்கத்திற்கு வர வில்லை.சிறுவர் தம் கல்விப் பயிற்சிக்குப் பயன்படும் கரும் பலகையும் குச்சியும் அக்காலத்தில் தான் தலைகாட்டின. பொதுக் கல்விமுறைப் பள்ளிகள் தோன்றாத காலம். கற்றவர் மிகச் சிலர். கற்க விரும்பிய இளைஞர்களோ குருவைத் தேடி, ஓடி நாடி நின்று அவர் கற்பிக்க விரும்பிய சில சுவடிகளையே பாடங் கேட்க வேண்டும். அதற்கும் மாணவராகிக் கற்க விரும்பு வோர் ஆசிரியரின் சமயத்தைத் தழுவியவராக இருக்கவேண்டும். என்ற கட்டாயமும் சிலரால் வற்புறுத்தப்பட்டுள்ளது. இவ்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
