106 தமிழ்க்கடல் அலை ஓசை விடர்ப்பாடுகளிடையே தமிழ்க் கல்வி எப்படிப் பரவும்? முடங்கிக் கிடந்தது. மேலும் அக்காலத்து நூல்கள் யாவும் ஓலைச் சுவடிகளே. இரும்பு எழுத்தாணி பிடித்து ஓலையில் எழுதுவது எளிதன்று. மிகுந்த பயிற்சியும் ஊக்கமும் இருந்தாலன்றி எவரும் முளையார். எழுதப்பட்ட நூலைப் படி எடுப்பது என்றால் மிகுந்த உழைப்பு வேண்டும். சுவடிகளை அழியாது காத்தற்கோ பெருமுயற்சியும் கவளமும் வேண்டும். காலத்தால் ஓலை மடித்து விடும்போது அவற்றை மறுபடியும் படி எடுத்துக் காத்து வைப்பதற்குப் படும் பாடு பெரிது, மிகப் பெரிது. தாள்களிலே எழுதுவது, நூலை அச்சியற்றுவது ஆகிய முறைகளோடு ஒப்பிட்டு நோக்கின், ஓலைச் சுவடிக் காலத்தில் அந்த முறைக்குத் தேவைப்பட்ட உழைப்பும், காலமும் பொருளும் பலப் மடங்காகும். இருந்தும் அம் முறையால் பிழைகள் மலிந்து, பாட வேற் றுமைகள் நிறைந்து, சிதைவுக்கும் அழிவுக்குமே'தமிழ்' ஆட் பட்டு வந்தது. இந்த நிலையால் தமிழ், தமிழ்ப் புலவர்தம் நாவிலே நட மாடிய அளவு எழுத்திலே நடமாடாமலும், எழுத்திலே இடம் பெற்ற அளவும் ஏட்டிலே நிலைபெறாமலும், ஏட்டிலே நிலை பெற்ற அளவும் நாட்டிலே கால்கொள்ளாமலும்,தமிழரிடையே ஒருகாலத்துப் பிறந்த அறிவுச்செல்வ மெல்லாம் பிற்காலத்து மக்கள் பெற்றுப் பயன் கொள்ளுமாறு எக் காலத்தும் நிலை பெறச் செய்யும் கருவி யில்லாமலும், தமிழன்னை காலத்தால் நலிந்தும் மெலிந்தும் குற்றுயிராகக் கிடந்தாள் என்றால் தவருகாது, மேலும் வேற்று நாட்டவர் ஆட்சிமொழி, பிறமொழி ஆதிக்கம், பொதுக்கல்வி யின்மை, தாய்மொழிப் பற்றுண ராமை, சாதி சமய வேற்றுமையினில் தழைத்த சமயக் காழ்ப்பு, இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாகும் அச்சுப் பொறி காணாமை முதலான காரணங்கள் பலவற்றால், தமிழ் இலக்கி வங்கள் கற்பாரும் கற்பிப்பாருமின்றிக் கருத்தினில் தோன்றாது: கண்ணிற் படாது, கவிராயர் வீட்டு மச்சிலே மறைவாகக் கிடந்து
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/127
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
