பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தமிழ்க்கடல் அலை ஓசை ஆறுமுக நாவலர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திரு மயிலை சண்முகம் பிள்ளை, மழவை மகாலிங்கய்யர் முதலானோர் குறிப்பிடப்பட வேண்டியவராவர். தாமோதரம் பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுபிட்டி என்னும் ஊரிற் பிறந்து, இளமையிலேயே கல்வியிற் சிறந்து, சுன்னாகம் முத்துக்குமார கவிராயர் என்னும் பெரும் புலவரிடத்தே தமிழ் இலக்கிய இலக்கணப் பயிற்சி பெற்றார். கல்லூரியில் பயின்ற காலத்திலேயே அவரது தமிழ்ப் புலமையை அவர் தம் ஆசிரியர் ஒருவர் கண்டு பாராட்டிப் 'பண்டிதர்' என்று அழைத்துள்ளார் என்பதினின்று அவரது அறிவின் சிறப்பு விளங்கும். அவரது திறமையை அறிந்த பெர்சிவல் பாதிரியார் சென்னையில் தாம் நடத்திய 'தினவர்த்தமானி' என்னும் கிழமை ஏட்டில் அதன் ஆசிரியராக அமரச் செய்தார். பின்னர் மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் விளங்கினார். சென்னைப் பல்கலைக் கழகம் முதன் முதலில் நடத்திய பி.ஏ. தேர்வில் முதல்வராகவும் பின்னர்ச் சட்டத்துறைத் தேர்விலும் வெற்றி பெற்றார். அரசாங்க அலுவலில் பல ஆண்டுகள் பணி ஆற்றி, பின்னர்ச் சில ஆண்டுகள் வழக்குரைஞராகவும் புதுக் கோட்டை நீதிபதியாகவும் இருந்து புகழ் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் தேர்வாளராகவும் அவர் இருந்தார். பின்னாட்களில், பரிதிமாற் கலைஞன் எனப் புகழ்பெற்ற சூரிய நாராயண சாத்திரி அப்போது பி.ஏ. தேர்வு எழுதினார். அவரது தமிழ்ப் புலமையைக் கண்டு மகிழ்ந்து பாராட்டி 'திராவிட சாத்திரி' என்னும் பட்டத்தை அவருக்கு வழங்கினார். அறிஞர் தாமோதரம் பிள்ளை அவர்களது தமிழ்த் தொண்டு பல வகையானுஞ் சிறந்திருந்தது கண்டு 'இராவ்பகதூர்' என்னுஞ் சிறப்புத் தகுதியை அரசாங்கம் அவருக்கு அளித்தது. அவர் இளமையிலேயே தமிழ்க் கல்வியில் சிறந்ததனால், அந்நாளில் ஏட்டுச் சுவடிகளாக இருந்த நூல்கள் பலவும் பதிப் பிக்கப்பட வேண்டுமென விழைந்தார். ஏட்டுச் சுவடிகள் பல, பூச்சிகளால் அரிக்கப்பட்டும், படிப்பாரும் பாதுகாப்பாரும்