110 தமிழ்க்கடல் அலை ஓசை யான் பரிசோதகாசிரியரென, இன்னுமொன்று கூட்டி, இவர் தொழில் முன்மூவர் தொழிலினும் பார்க்க மிகக் கடியதென்றும், அவர் அறிவு முழுவதும் இவர்க்கு வேண்டிய தென்றும் வற்புறுத்திச் சொல்கின்றேன். தூக்கினாலன்றோ தெரியும் தலைச் சுமை? பரிசோதகாசிரியர் படுங் கஷ்டமும் ஓர் அரிய பழைய நூலைச் சுத்த மனச்சாட்சியோடு பரிசோதித்து அச்சிட் டார்க்கன்றி விளங்காது. ஒன்றற்கொன்று ஒவ்வாத இருபது இருபத்தைந்து பிரதிகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு என் கண் காணச் சிந்தாமணியைப் பரிசோதித்துப் பதிப்பித்த கும்பகோணம் தமிழ்ப்பண்டிதர் உ. வே. சாமி நா தய்யரைக் கேட்டால் இந்நால்வகை ஆசிரியர் பாட்டின் தாரதம்மியம் சற்றே தெரியலாம். எனக்கு அவரும் அவருக்கு நானுமே சாட்சி'. இவ்வாறு பல்லாற்றானும் பேருழைப்பும் விடாமுயற்சியும் குன்றாத ஊக்கமும் வேண்டும். இவ்வரிய பதிப்பாசிரியர் பணியைத் தாமோதரம் பிள்ளை அவர்கள் தாமே விரும்பி மேற் கொண்டார். அதனால் நமக்குக் கிடைத்த செல்வங்கள் பல. திருப்பெருந்திரு ஆறுமுக நாவலரோடு தொடர்புடைய வராகத் தாமோதரம் பிள்ளை அவர்கள் தமிழ்த் தொண்டு செய்த நிலையில் நாவலர் அவர்கள் 1879 ஆம் ஆண்டில் தொல்காப் பியம் சொல்லதிகாரத்தைச் சேனாவரையர் உரையோடு வெளி யிட்டனர். நாவலருக்குப் பின்னும், இவர் அப் பணியை விடாது தொடர்ந்து தொல்காப்பியம் பொருளதிகாரத்தை நச்சினார்க் கினியர் உரையோடு 1885 இல் பதிப்பித்தார். அதற்கு முன்னரே வீரசோழியம், கட்டளைக் கலித்துறை ஆகிய நூல் களைப் பதிப்பித்திருந்த பிள்ளை அவர்கள் இறையனார் அகப் பொருளையும், தணிகைப் புராணத்தையும் பதிப்பித்தனர். அதன் பின்னர்ப் பல ஏடுகளையும் ஆராய்ந்து 1887 இல் கற்றோர் ஏத்துங் கலித்தொகையை அச்சேற்றி வழங்கினார். அதைத் தொடர்ந்து இலக்கண விளக்கத்தை உரையுடன் பதிப்பித்த தோடு, தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணியையும் வெளியிட்டார். அதன் பின்னர்த் தொல்காப்பியம் எழுத்ததி காரமும் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிடப்பட்டது. மழவை மகாலிங்க அய்யர் அவர்கள் பல ஆண்டுகட்கு முன்பே
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
