பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் ஏடுகளைப் பதிப்பித்துத்... தாமோதரனார் இதனைப் பதிப்பித்திருந்த போதிலும் தொல்காப்பியம் முழுவதும் பிள்ளை அவர்கள் பதிப்பாக வெளிவந்தது சிறப்பே யாகும். பின்னும் அவர்கள், அகநானூற்றைப் பதிப்பிக்க விரும்பி ஆராய்ந்துகொண்டிருந்த காலத்தில் 1901இல் தம் உயிரினும் இனிதெனக் கொண்ட தமிழொடு கலந்துவிட்டார். அவரது தூயதமிழ்ப் பணியாலேயே சங்க இலக்கியங்கள் பல தமிழ் கற்பாரிடையே பேச்சிலும் எழுத்திலும் நடமாடும் நிலை பிறந்தது என்றால் அது மிகையாகாது. . மேலும் அவர் பதிப்பித்த ஏடுகளுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரைகள் பலவும், அக்காலத்திய தமிழ்மொழி ஆராய்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன. தமது ஆராய்ச்சியில் தவறியதைப் பிறர் விளக்கி உரைப்பின், அக்கருத்தை ஏற்றுக்கொள்ளவும் அவர் தயங்கியதில்லை ஆனால், தமிழ் மொழியை இழித்தும் தாழ்த்தியும் கூறுவார் கருத்தை அவர் கண்டித்துரைக்கத் தவறியதில்லை. தமிழ் ஒரு தனிமொழி; அதன் பெயர் திரவிட மரூஉ அன்று, 'தமிழே' என்பதும், அது பரதகண்டத்தில் எம் மொழிக்கும் பிந்தியதன்று என்பதும், எவ்வாற்றானும் பிற மொழிக்குத் தாழ்ந்ததன்று என்பதும் வீரசோழியப் பதிப்புரை வில் அவர் குறித்த கருத்துகளாகும். தமிழ் என்னும் பதம் 'திராவிடம்' என்னும் பதத்தினின்றும் மருவி வருதற்கு இடனுண்டு என்பதைக் காட்டி, 'திராவிடமே தமிழாயிற்று' என்று சிலர் கூறி வாதித்ததைக் கண்டு அதனை மறுத்து அவர் எழுதியதில் ஒரு பகுதி இது: "அகத்தியர் காலத்தின் முன் தொட்டு உள்ள பதினாறாயிரம் வயதுள்ள 'தமிழ்' பதத்தையும் உச்சயினி புரத்தில் இரண் டாயிரம் வருடத்திற்கு முன் பிறந்த 'திராவிட' பதத்தையும் ஒன்றென்றால் யார்தாம் நகையார்? மூதாதை திருமன்றலில் பௌத்திரன் சந்தன, தாம்பூலம் பரிமாறினான் என்பதற்கும் இதற்கும் யாது பேதம்? தமிழ் என்னும் பதத்தை எடுத்தாண்ட அகத்தியர், தொல்காப்பியர் காலத்துச் சமற்கிருத நூலுடை