இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
112 தமிழ்க்கடல் அலை ஓசை யோராய நாரத்,வியாச, வசிட்டராதியர் வாய்மொழியினின்று திராவிட சப்தம் வழங்கியதை முதற் காட்டியன்றோ பின்னர் இம்மதம் நாட்டப் புகுதல் வேண்டும்? சிவபெருமான் அகத்தி யரைப் பொதிகைக்கு அனுப்பிய கதை, காந்தம் முதலிய பழைய புராணங்களில் உளதாகவும் ஆண்டுத் திராவிட சப்தத்தைக் காண்கிலமே! ஆலசிய புராணம், பாகவதம் முதலிய பிற்றை நாள் நூல்களிலன்றோ அது முளைத்தது! அகத்தியரும், 'யான் போகுமிடம் கலை வல்லோரும் முனிவரும் நிறைந்த பெருமாண் பினது ஆதலின் அவர்கள் மொழியை உபதேசித்து என்னை அனுப்புக' என்று கேட்டதன்றித் 'திரவிட' மென்று கேட்ட தில்லையே". இவ்வாறு தமிழ் என்னும் பெயரே தமிழுக்கு உரியதாவதை நிலைநாட்டியது முதல்,- சங்க இலக்கியச் செல்வங்களை வழங்க கியது வரை தமிழ் மக்கள் புத்துணர்ச்சி கொள்ளுதற்குத் துணைநின்றார் பெருந்தகை தாமோதரம் பிள்ளை அவர்கள். -