பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தமிழ்க்கடல் அலை ஓசை மிசன் கல்லூரி ஒன்றில் பலவாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணி ஆற்றியுள்ளார். அக்காலத்தில் தமிழ்ப் புலவராயினார், தமிழ்மொழிக்குப் பெருமை கூறுவதாக எண்ணிப் பல்வேறு புராணக் கதைகளிலே அடியவர் பெருமையாகக் கூறப்பட்ட கற்பனைகளையே எடுத்து மொழிவதன்றி, ஒரு மொழியின் உண்மையான சிறப்புக ளாகிய தொன்மை, வளமை, இனிமை, நுண்மை, எளிமை, மேன்மை, தெளிவு முதலானவற்றையோ, எழுத்து வைப்பு, சொல் ஆக்கம், பொருள் விரிவு, ஓசை நலம், இலக்கணப் பகுப்பு, இலக்கிய நெறி முதலானவற்றையோ ஆராய்ந்து காட்டுவதில் ஈடுபடவில்லை. ெ மேல்நாடு தந்த மேதை டாக்டர் கால்டுவெல் அவர்கள் பலவாண்டுகள் தொடர்ந்து நிகழ்த்திய அரியதோர் ஆராய்ச்சி யின் பயனாக, கி.பி. 1856 இல் வெளியிட்ட "திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் ஒன்றே அக்காலத்தில் அத்துறையில் விளங்கி நின்றதாகும். எல்லை காணாத் தொன்மையுடைய தமிழின் மொழிக் கூறுகளைத் தமிழின் வழி வழிப் பிறந்த தமிழ்ப் புலவோர் ஆராய முற்பட்டாலன்றோ பிற நாட்டவர் கண்டறியாத நுண்மைகள் பலவற்றையுங் கண்டு உலகுக்கு உணர்த்தக் கூடும்? அந்த முயற்சியில் ஆர்வத் துடன் அடியெடுத்து வைத்து நடந்து காட்டிய முதல் தமிழ்ப் புலவர் கார்த்திகேயர் எனலாம். அவர் வரைந்த மொழிநூலுக்கு முன்னுரை வழங்கிப் பாராட்டியவர் சென்னை, வேப்பேரி கமிசிஸ் கல்லூரி முதல்வ ராகவும், திராவிட ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் விளங்கிய பேராசிரியர் மு. சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்க ளாவர். அந்த முன்னுரையில் காணக்கிடப்பது இது; "தமிழ்ப் புலவர்கள் வரலாற்று உணர்வும், ஒப்பியல் அறி வும் இல்லா நடமாடும் 'சுவடிக் கட்டுகள்' எனவும், 'கருதாட கங்கள்' எனவும் பழித்துரைக்கப்படும் இழிவுக்கு ஆளாகியுள்ள இந்தக் கெடுநாட்களில், திறமான மொழிப் புலமையும், ஐயத்