பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மொழிநூல்' கண்ட மூதறிஞர் 115 திற்கிடனில்லாத தெளிவும், தனி ஆற்றலும், ஆழமான அறி வும் பெற்றிருந்தாலன்றிக் குறுகிய நோக்கம், பொறாமை முதலிய வற்றால் வளர்ந்து நிற்கும் தடுப்புச் சுவரைக்கடந்து மேலோங்கி விளங்குதல் யார்க்கும் இயல்வதன்று. அவருள்ளும் தொன்மையான இலக்கியக் கடலுள் மூழ்கி, அரிய கலைச்செல்வங்களையெல்லாம் தேடிக் கொணர்ந்து, சிறந்த வடிவுடையதாய்ப் பதிப்பித்து வழங்குவார் ஒருவகை. தொன் னாள் முதல் வளர்ந்துவரும் மொழியின் வரலாற்றை ஆராய முற்பட்டு நள்ளிரவெல்லாம் கண் விழித்துச் சிந்தனையிலே ஆழ்ந்து அல்லற்பட்டு அரும்பெரும் உண்மைகள் சிலவற்றைக் கண்டு தெளிந்து உலகிற்கு வழங்குவார் ஒருவகை. அறிவுடன் பொருந்திய நல்வாழ்வுடையவராக மக்கள் உயருதற்கு இவ்விரு வகையாரது தொண்டும் வேண்டப்படுவதே. உ பொறுமையுடன் அயராது உழைத்து, அரிய சங்க இலக் கியங்களைப் பதிப்பித்த பெருமையுடைய சாமிநாத ஐயர் அவர் களின் திருப்பணியை ஒப்பவே, தளராது ஆராய்ச்சி நிகழ்த்திய கார்த்திகேயனார் தொண்டும் தமிழுலகத்திற்கு வேண்டப்படுவ தாகும். இன்றைய ஆட்சியாளர்கள் சாமிநாதய்யர் அவர்களது தொண்டைப் போற்றி, மகாமகோபாத்தியாயர் என்னும் சிறப்பு வழங்கியுள்ளது போன்றே, பண்பட்ட ஆராய்ச்சியாளரான கார்த்திகேயனாரையும் பாராட்டிச் சிறப்புச் செய்ய வரவேண்டும். முன் இந்த 'மொழிநூல்' அரிய பல உண்மைகளை ஆராய்ந்து எடுத்துரைப்பதாகலின், இது மேலும் பலரைச் சிந்திக்கத் தூண்டும், ஆராய்ச்சித் துறையில் மிகப் பலரை ஈடுபடுத்தும்.' இவ்வாறு தமிழ்ப் பேரறிஞர் ஒருவரது பாராட்டைப் பெற்ற பெரியார் கார்த்திகேயனார். அவரது நூலில் காணப்படும் அரிய கருத்துகளை ஈண்டுக் காண்க : 'குமரிக்குத் தென்பால் ஒரு பெரு நிலப்பரப்பு இருந்த தென்பதும், அஃது உலகிற்கு நடுமைய மென்பதும், ஆண்டிருந்